பேட்ட படத்துக்குப் பிறகு கே.எஸ்.ரவிக்குமாருடன் கைகோர்க்கிறார் ரஜினி

“பேட்ட” படத்துக்குப் பிறகு நடிகர்  ரஜினிகாந்த் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தற்போது ரஜினி நடித்து ஓடிக்கொண்டிருக்கும் 2.0 திரைப்படத்தை அடுத்து வரும் பொங்கலுக்கு பேட்ட படம் வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்.

இது ரஜினியின் 165வது படமாகும்.

இதற்கிடையே இருபத்தியிரண்டு வருடங்களாக தனது அரசியல் பிரவேசம் குறித்து எதிர்பார்ப்புகளை மட்டுமே ஏற்படுத்தி வந்த ரஜினி கடந்த (2017) டிசம்பர் 31ம் தேதி, தான் அரசியல் கட்சி துவங்கப்போவதாக அறிவித்தார்.

ஆனால் அதன் பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தவிர முக்கிய அரசியல் மற்றும் மக்கள் பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்த்து வருகிறார். தனது கட்சியின் பெயர், கொடி போன்றவற்றை அவர் இன்னும் அறிவிக்கவில்லை மேலும், சமீபத்தில் ஆங்கில ஊடகத்துக்கு பேட்டி அளித்த அவர் இன்னும் தான் இன்னும் அரசியலுக்கு முழுமையாக தயாராகவில்லை என்ரும் அரசியல் என்பது ஆபத்தான விளையாட்டு என்றும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் வரும் பொங்கல் அன்று அவர் நடித்த பேட்ட திரைப்படம் வெளியாகிறது. அதற்கு அடுத்து தனது 166 வது படத்துக்கு இயக்குநராக கே.எஸ். ரவிக்குமாரை ரஜினி தேர்ந்தெடுத்துள்ளார் என்ற செய்தி பரவியுள்ளது.

காலா படம் வெளியாக இருந்த நிலையிலேயே இப்படியோர் தகவல் பரவியது. ரஜனியிடம் கே.எஸ். ரவிக்குமார் இரு கதைகளைக் கூறியதாகவும் ஒன்று அரசியல் குறித்த கதை மற்றது அரசியல் அல்லதாத  கதை என்று கூறப்பட்டது. இப்போது, அரசியல் இல்லாத கதையை ரஜினி தேர்ந்தெடுத்துவிட்டதாகவும்,  படத்தை லைக்கைா நிறுவனமே தயாரிக்க இருப்பதாகவும்  தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

கே.எஸ். ரவிக்குமார், ரஜினிக்கு மிகவும் ஃபேவரைட் இயக்குநர். ரவிக்குமார் இயக்கத்தில் முத்து, படையப்பா, லிங்கா ஆகிய படங்களில் ரஜினி நடித்திருக்கிறார்.

இதற்கிடையே ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்திலும் ரஜினி நடிக்க உள்ளதாக முன்பே கூறப்பட்டது. ஆகவே தனது அடுத்த இரண்டு படங்கள் குறித்து ரஜினி முடிவெடுத்துவிட்டதாக தெரிகிறது.

ஆகவே ரஜினியின் அரசியல் பிரவேசம் இன்னும் தள்ளிப்போகலாம் என்று ஒரு கரு்து நிலவுகிறது.

ஆனால், இன்னொரு கருத்தும் உலவுகிறது. அதாவது, “சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகத்தான் ரஜினி திட்டமிட்டிருக்கிறார்.  தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021ம் ஆண்டுதான் வருகிறது.  அடுத்த (2019ம்) வருடம் ஜனவரி இறுதியில் அவரது 166வது படத்தின் படப்பிடிப்பு துவங்கும்.  அதே வருடம் தீபாவளிக்கு அந்தப்படம் வெளியாகும்.  அதன் பிறகு ரஜினியின் 167வது படத்தின் படப்பிடிப்பு துவங்கி அந்தத் திரைப்பம் 2010ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும். அதன் பிறகு ரஜினி படங்களில் நடிக்க மாட்டார். கட்சி விவகாரங்களில் முழுமையாக ஈடுபடுவார்.

தற்போது புதிதாக அவர் படத்தை ஒப்புக்கொண்டதற்குக் காரணமே கட்சிக்கான செலவுகளுக்காகத்தான்.  கட்சி நிதி என்று ரஜினி கேட்காமலேயே வந்து கோடி கோடியாக கொட்டுவதற்கு எத்தனையோ பெரு முதலாளிகள் இருக்கிறார்கள். ஆனால் கட்சி நிதி கொடுத்துவிட்டு , நாளை ரஜினி ஆட்சிக்கு வந்த பிறகு அதைவிட பல மடங்கு பலனை எதிர்பார்ப்பார்கள். அது மக்களுக்கு எதிரானதாகவே முடியும். ஆகவேதான் எவரிடமும் கட்சி நிதி வாங்கக்கூடாது என்று தீர்மானித்துள்ள ரஜினி மேலும் இரு படங்களில் மட்டும் நடிக்க  தீர்மானித்துள்ளார்” என்றும் ஒரு தகவல் உலவுகிறது.

#Rajini #joins #director #ks.Ravikumar #166 #film

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: after-the-petta-film-actor -rajinikanth-joins-with-director-ks-ravikumar, பேட்ட படத்துக்குப் பிறகு கே.எஸ்.ரவிக்குமாருடன் கைகோர்க்கிறார் ரஜினி
-=-