இந்தியாவில் மூணரை மாதங்களுக்கு பிறகு 40ஆயிரத்துக்கு கீழே குறைந்த கொரோனா பாதிப்பு 500க்கும் கீழே இறங்கிய உயிரிழப்பு…

 
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,469-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல உயிரிழப்பு 488 ஆக சரிந்துள்ளது.  105 நாட்களுக்கு (மூணறரை மாதங்கள்)  பிறகு, முதன்முறையாக உயிரிழப்பு 500க்கும் கீழே குறைந்துள்ள நிலையில், பாதிப்பும் 40ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 36, 469 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 79 ,46, 429 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பிலிருந்து,  63,842 பேர்  குணமடைந்துள்ளனர்.  இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 72 லட்சத்து 170 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக488 பேர் தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரத்த 502 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலையில் நாடு முழுவதும்,  6,25, 857 பேர் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில், குணமடைந்தோர் விகிதம் 90.62% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.50% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 7.88% ஆக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று  ஒரே நாளில் 9,58,116 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 10,44,20,894 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதித்தோர் அதிகம் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், ஆந்திரா 2-வது இடத்திலும், கர்நாடகா 3-வது இடத்திலும், தமிழ்நாடு 4-வது இடத்திலும் இருந்து வருகிறது.