சிகிச்சைக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் இந்தி நடிகர் இர்ஃபான் கான்

மும்பை

விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட இந்தி நடிகர் இர்ஃபான் கான் தனது லண்டன் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்குகிறார்.

பிரபல பாலிவுட் நடிகரான இர்ஃபான் கான் கடந்த 1988 ஆம் ஆண்டு சலாம் பாம்பே படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவருடைய லஞ்ச் பாக்ஸ், பிகு உள்ளிட்ட படங்கள் அவருக்கு மேலும் புகழை அளித்தது. அவர் நடிப்பில் வெளி வந்த “இந்தி மீடியம்” என்னும் திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

இந்த படத்துக்காக பல விருதுகளை பெற்ற இம்ரான் கானை ஒரு விசித்திரமான நோய் ஒன்று தாக்கியது. நியூரோஎண்டோக்ரைன் டியூமர் எனப்படும் வியாதியால் தாம் அவதிப்படுவதாக அவர் தனது டிவிட்டரில் தெரிவித்திருந்தார். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது இதற்காக அவர் மும்பை மற்றும் லண்டன் நகரில் சிகிச்சைகள் எடுத்துக் கொண்டார்.

தற்போது அவர் முழு குணம் அடைந்து விட்டபடியால் வரும் பிப்ரவரி மாதம் 22 அம் தேதி முதல் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள உள்ளார். இந்தி மீடியம் படத்தின் இரண்டாம் பாகத்துடன் மீண்டும் தனது நடிப்புப் பணையை தொடங்க உள்ள இர்ஃபான் கானுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published.