Random image

டிரம்ப் சமூகவலைதளக் கணக்குகள் முடக்கப்பட்டதால் தவறான தகவல் பரவல் பெருமளவு குறைவு

வாஷிங்டன்

மெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த தவறான தகவல்கள் டிரம்பின் சமூக வலை தள கணக்குகள் முடக்கப்பட்டதால் பெருமளவு குறைந்துள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்த செய்திகள் வந்ததில் இருந்தே தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக அவர் குறிப்பிடத் தொடங்கினார்.  அவரது ஆதரவாளர்களும் இதே தகவலை நாடெங்கும் பரப்பவே கடும் குழப்பம் ஏற்பட்டது.  இறுதியாக ஜோ பைடன் வெற்றி அறிவிக்கப்பட்ட பிறக் டிரம்ப் சமூக வலைத்தளங்களில் இட்ட பதிவினால் கடும் வன்முறை வெடித்தது.

இந்த பதிவுகளால் டிரம்ப் ஆதரவாளர்கள் வாஷிங்டன் நகரம் முற்றுகை இடப்பட்டு நாடாளுமன்றத்தைத் தாக்க முற்பட்டனர்.  இந்த கலவரத்தினால் உயிரிழப்பு, கட்டிடச் சேதங்கள் ஆகியவை ஏற்பட்டதால் டிரம்ப் மற்றும் அவருடைய ஆதரவாளர்களின் முகநூல், இன்ஸ்டாகிராம், டிவிட்டர், ஸ்னாப்சாட், உள்ளிட்ட பல சமூக வலைத் தள கணக்குகள் ஜனவரி 8 ஆம் தேதி முடக்கப்பட்டன.

இந்த கணக்கு பதிவுகள் மூலமாகவே கலவரம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.  கடந்த சில வருடங்களாகவே அமெரிக்க வலது சாரி ஆதரவாளர்கள் டிரம்புக்கு ஆதரவாகப்  பல பதிவுகள் இட்டு வந்ததால் டிரம்ப் தனது வெற்றி நிச்சயம் என எண்ணி இருந்தார்.  ஆனால் தேர்தல் முடிவுகள் மாறாக அமைந்ததால் அவர் வன்முறையைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டம் பட்டுள்ளது.  இதுவரை டிரம்ப் ஆதரவாளர்களின் 70000க்கும் மேற்பட்ட சமூகவலை தள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

கணக்குகள் முடக்கத்துக்குப் பிறகு அதாவது கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் தேதி முதல் அதிபர் தேர்தல் முறைகேடுகள் குறித்த செய்திகள் பெருமளவில் குறைந்துள்ளன.   இவை குறித்து 25 லட்சம் பதிவுகள் வெளியான நிலையில் இந்த தடைக்கு ஒரு வாரம் ஆகிய நிலையில் தற்போது 6.88 லட்சம் பதிவுகள் மட்டுமே வெளியாகி உள்ளன.   இந்த பதிவுகள் கடந்த நவம்பர் மாதம் 3 ஆம் தேதியில் இருந்து பதியப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.