அமெரிக்காவின் 30 இறக்குமதி பொருட்களுக்கு 50% வரை வரி விதிப்பு…இந்தியா பதிலடி

டில்லி:

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள்கள், பாதாம், ஆப்பிள்களுக்கு விதிக்கப்படும் வரியை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு 25%, அலுமினியத்துக்கு 10% வரி விதித்து அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கு பதிலடியாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 800 சிசி பைக்களுக்கு 50%, பாதாம் பருப்புக்கு 20%, வால்நட்களுக்கு 20%, ஆப்பிள்களுக்கு 25% என 30 பொருட்களுக்கு அதிகபட்சம் 50 சதவீதம் வரை வரி விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் 21ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.