இரண்டரை ஆண்டுக்கு பின் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய குழு இந்தியா வருகை

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய குழுவினர் இரண்டரை வருடத்திற்கு பின்னர் இந்தியாவிற்கு வருகின்றனர்.


மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் வரும் 21-ம் தேதி ஐசிசி கூட்டம் நடைபெறுகிறது.

இதில் கலந்துகொள்வதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜிம் ஷேதி, தலைமை நிர்வாக அதிகாரி சுபான் அகமது தலைமையிலான வாரிய குழுவினர் இந்தியா வருகின்றனர். இரண்டரை வருடங்களுக்கு பின் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய குழுவினர் இந்தியா வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.