மக்கள் சேவை மையம் : வசந்தகுமார் எம்.பி.யை கண்டதும் கைது செய்யப்பட்ட குமரி மாவட்டகாங்கிரசார் விடுதலை…

நாகர்கோவில்:
க்கள் சேவை மையம் அமைத்த கன்னியாகுமரி காங்கிரசாரை காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்துதகவல் அறிந்த குமாரி மாவட்ட எம்.பி. வசந்தகுமார் அங்கு வந்ததைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களை காவல்துறையினர் விடுதலை செய்தனர்.
கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிக்கி அல்லல்பட்டு வருகின்றனர். அவர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், கொரோனாதொற்றை காரணம் காட்டி அவர்களை வெளியே செல்ல மாநில அரசு தடுத்து வருகிறது. தற்போது ஊரடங்கில்பல தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்புபணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையொட்டி, குமரி மாவட்டத்தில், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டம் செல்லவும், மாநிலம் விட்டு மாநிலம் செல்லவும் உதவி செய்ய மாவட்ட கமிட்டி சார்பில்  மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார், முன்னாள் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் பிரின்ஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் முன்னிலையில் மக்கள் சேவை மையம் அமைக்கப்பட்டது. 
இதையறிந்த காவல்துறையினர், அதற்கு விதிப்பதாக கூறி, காங்கிரஸ் தலைவர்களையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த குமரிமாவட்ட காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். இதையறிந்த காவல்துறையினர், கைது செய்த அனைவரையும் விடுதலை செய்தனர். இந்த சம்பவம் அந்தபகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

கார்ட்டூன் கேலரி