afternoon-news
முதல்–அமைச்சரின் உடல்நிலை அறிய ராகுல்காந்தி திடீர் சென்னை விசிட். அப்பல்லோ மருத்துவமனை சென்று மருத்துவர்களிடம் விசாரித்துவிட்டு, முதல்வர் விரைவில் குணமடைவார் என்று கூறினார்.
எதிரிகள் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்க ராணுவத்திற்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது என்று உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் எந்தவிதமான சமரசத்துக்கும் இடமில்லை என்று கூறினார்.
தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்து பற்றி மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி
14 மாதம் கிடப்பில் கிடந்த மே தின பூங்கா – தேனாம்பேட்டை இடையே சுரங்கப்பாதை பணிகள் தொடக்கம் 20 மாதங்களில் பணியை முடிக்க திட்டம்
ஒட்டு மொத்தமாக விடுப்பு போட்டுவிட்டு சென்னையில் பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் 7–வது ஊதியக்குழுவை அமல்படுத்த கோரிக்கை
 கோவையில் பஞ்சு வியாபாரி வீட்டில் துணிகரம்; 150 பவுன் நகை, ரூ.40 லட்சம் கொள்ளை; வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து கைவரிசை.
டெல்லி உட்பட 22 விமான நிலையங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை
பூந்தமல்லி அருகே ஓய்வு பெற்ற கோர்ட்டு பதிவாளர் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை
காவிரி பிரச்சினையில் ‘தமிழகத்திற்கு துரோகம் செய்வது கர்நாடக காங்கிரஸ் தான், பிரதமர் அல்ல’ டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை
மோடியின் தாய்க்கு பாகிஸ்தான் பிரதமர் கொடுத்த சேலை என்னாயிற்று. தற்போது உரி தாக்குதலை அடுத்து, மோடி தலைமையிலான அரசு பாகிஸ்தான் தீவிரவாத நிலைகள் மீது ’சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ தாக்குதல் நடத்தின. இதற்கிடையில் மோடி பாகிஸ்தான் பிரதமரிடம் காட்டிய மரியாதை என்ன ஆனது என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்
எங்கள் அதிகாரியிடம் பேட்டி எடுத்ததாக போலியாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது: பாகிஸ்தான் சொல்கிறது
 ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 4 முறை ‘சர்ஜிகல்’ தாக்குதல் நடந்தது: சரத்பவார்
‘உரி பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன்’ முதன் முதலாக பாகிஸ்தான் பாடகர் கருத்து
அமெரிக்காவில் புயல் தாக்குதலால் அவசர நிலை பிரகடனம்
மொரிசீயஸ் இருந்து கண்டு எடுக்கப்பட்ட விமான் பாகங்கள் மலேசிய விமானத்துக்கு உரியவையே மலேசியா உறுதி
 டில்லி துணைமுதல்வர் சிசோடியாவுக்கு ஊழல் தடுப்பு பிரிவினர் சம்மன்
 கூடங்குளத்தில் 3 , 4 அணு உலை கட்டட பணி விரைவில் துவங்கும்
மதுரையில் மின்சாரம் தாக்கி இருவர் பலி
செம்மரங்களை கடத்த முயன்றதாக தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் கைது.ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக தமிழகத்தைச் சேர்ந்த 4 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்
சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்தில் தேடப்பட்டு வந்த 6 நக்சல்கள் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, டி.ஐ.ஜி மற்றும் எஸ்.பி முன் இன்று காலை சரணடைந்தனர்
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் செல்போனை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த புதிய செல்போனுக்கு உலகின் பல நாடுகளில் நல்ல வரவேற்புக்குள்ளது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் விற்பனையை இன்று தொடங்க உள்ளது. அக்டோபர் 7ம் தேதியான இன்று இரவு 7 மணிக்கு விற்பனை தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
லோதா கமிட்டி பிசிசிஐ விவகாரத்தில் இன்று பிற்பகல் 1 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. லோதா குழு பரிந்துரைகளை பிசிசிஐ அமல்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது. இதனையடுத்த உச்சநீதிமன்ற நீதிபதி தாக்கூர் அமர்வு தலைமையில் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது
திருவண்ணாமலை அருகே துணிகரம்: நகைக்கடை சுவரில் துளையிட்டு ரூ.9 லட்சம் நகைகள் கொள்ளை; காவலாளி உள்பட 2 பேரை கட்டிப்போட்டு மர்ம நபர்கள் கைவரிசை
அடுத்த உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகள் நிறுத்தி வைப்பு; மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு
தசரா பண்டிகை விடுமுறை அவசர வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் நியமனம்; ஐகோர்ட்டு அறிப்பு
ஜிசாட் 18 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
வாக்காளர் அடையாள அட்டையில் அழகான உருவத்தை பதிவு செய்யலாம்
கத்ரீனா கைப் பித்தூர் என்ற படத்தில் ஆதித்யா ராய் கபூருடன் சேர்ந்து நடித்தார். அப்போது ரன்பீருடன் நெருக்கமாக இருந்தார். பின்னர் சித்தார்த் மல்கோத்ராவுடன் சிறிது சுற்றி திரிந்தார். தற்போது ஆதித்யா ராய் கபூர் இடையே நெருக்கமாக இருப்பதாகவும், . இருவரும் ஒன்றாக சேர்ந்து மும்பை, பாந்த்ராவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் இரவு உணவிற்காக சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது
கனடாவில்  ஜனவரி மாதம் தமிழ் பண்பாட்டு மாதமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 1950-களில் தமிழர்கள் முதன் முறையாக கனடாவில் குடியேறினார்கள். தமிழர்களின் பங்களிப்பை  அங்கீகரிக்கும் விதமாக கனடா அரசு தமிழுக்கு இந்த கெளவரவத்தை அளித்திருக்கிறது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது உண்மைதான் நேரில் பார்த்தவர்கள் பரபரப்பு தகவல்
ஐதராபாத்தில் ரூ.230 கோடி போதை மருந்து பறிமுதல் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட பெங்களூரு விஞ்ஞானி–மனைவி கைது விமானப்படை அதிகாரியும் சிக்கினார்
காஷ்மீர் எல்லையில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் பாகிஸ்தான் பீரங்கி தாக்குதல் ராணுவம் தகுந்த பதிலடி
ராணுவம்– கிராம மக்கள் நலனுக்காக ராஜஸ்தானில் இன்று சிறப்பு யாகம் முதல்–மந்திரி கலந்து கொள்கிறார்
செல்போனில் விமானப்படை தளத்தை வீடியோ படம் எடுத்த 2 பேர் கைது
வெனிசுவேலா எதிர்க்கட்சி தலைவர் ஹென்ரிக் கேப்ரீலெஸ் தன்னால் உறுதியாக அதிபர் நிக்கோலஸ் மதுரோவை பதவி விலகச் செய்ய முடியும் என்று கூறியுள்ளார் , வெனிசுவேலா வறுமையால் பீடிக்கப்பட்டுள்ளது என்றும், மக்கள் தொகையில் எண்பது சதவீதம் பேர் மாற்றத்தை விரும்புவதாகவும் அவர் கூறினார்
 ஹைதியில் ‘மேத்யூ’ புயல் ருத்ர தாண்டவம்; டொமினிக்கன் குடியரசும் தப்பவில்லை; 11 பேர் பலி
அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தல் விவாதத்தில் ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி வேட்பாளர்கள் மோதல் டிரம்ப் முட்டாள் என்றும், ஹிலாரி பலவீனமானவர் என்றும் வார்த்தை யுத்தம்
லிபியாவில் குண்டுவீச்சில் அப்பாவி மக்கள் 3 பேர் பலி
அமெரிக்காவில் சீக்கியர் மீது இனவெறி தாக்குதல்
உரி தாக்குதல் குறித்து விசாரணை நடத்தாமலேயே பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம்சாட்டுகிறது -நவாஸ் ஷெரீப் குற்றச்சாட்டு
💰💰தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி  2852-9(-0.31%) 
24 காரட் 10கி  30500-100(-0.33%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ  45900  -200(-0.43%)
பார் வெள்ளி 1 கிலோ 42930  -135(-0.31%)
எதிரான  ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று தேர்வு
 ‘இந்திய டெஸ்ட் தொடரில் இடம் பெறுவேன்’ இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் நம்பிக்கை
மகள் மருத்துவமனையில் சேர்க்கபட்டு இருந்த போதும் இந்தியாவின் வெற்றிக்காக விளையாடிய முகமது ஷமி
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி சென்னை–டெல்லி அணிகள் இன்று மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்து கேரளா அணிக்கு 2–வது தோல்வி
சீன ஓபன் டென்னிஸ் ஆன்டி முர்ரே, கிவிடோவா கால் இறுதிக்கு தகுதி
ஆமதாபாத்தில் நாளை தொடங்குகிறது 12 நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை கபடி பாகிஸ்தான் அணி பங்கேற்க தடை