மதிய செய்திகள்

 

 • கோரக்பூர்: கோரக்பூர் உரத் தொழிற்சாலை மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி கோரக்பூர் சென்றடைந்தார்.
 • ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அரேப்பாளையத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்கள் 5 பேர் விறகு சேகரிப்பதற்காக 2 கி.மீ. தூரத்தில் உள்ள காட்டுப் பகுதிக்கு புதன்கிழமை சென்றனர். அப்போது, மூங்கில் தோப்பு மறைவில் நின்று கொண்டிருந்த ஒரு ஒற்றை காட்டு யானை அந்தப் பெண்களைத் துரத்தியது. அப்போது, யானையிடம் சிக்கி மனோகரன் மனைவி ஜடச்சி (வயது-55) உயிரிழந்தார்.
 • பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 25 சவரன் நகைகளை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். இலுப்பூர் அடுத்த தாயினிபட்டியில் இந்திராணியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கைவரிசை காட்டியுள்ளனர்.

gmk-sta

 • சென்னை: சென்னை கொளத்தூர் ஜி.கே.எம். காலனியில் உள்ள பள்ளியில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். பள்ளியில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஸ்டாலின் கேட்டறிந்தார்
 • பயங்கரவாதத்தின் தொழிற்சாலையாக பாகிஸ்தான் திகழ்வதாகவும், இந்தியாவில் பாகிஸ்தான் வன்முறையை ஏவி வருவதாகவும் பாஜக-வின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் உசைன் குற்றம்சாட்டினார்.
 • பகுஜன் சமாஜ் கட்சியின் தொண்டர்கள் எங்களுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருவதால், என்னுடைய 12 வயது மகள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று தயாசங்கர் மனைவி சுவாதி சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
 • திருப்பூர் : திருப்பூர் சிவில் என்ஜினியர்கள் சங்கம் ஆண்டுதோறும் திருப்பூரில் ‘கன்ஸ்ட்ரோ மெகா’ என்ற பெயரில் கட்டிட கட்டுமான கண்காட்சியை நடத்தி வருகிறது. தற்போது 12வது முறையாக திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் இன்று கண்காட்சி நடைபெற உள்ளது.
 • பாஜக எம்பிக்கள் முழக்கத்தால் மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பாதுகாப்பை மீறி செயல்பட்ட ஆம்ஆத்மி எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்ற பாதுகாப்பை மதிக்காமல் காரில் சென்ற எம்.பி. பகவந்த் மீது அவை உரிமை மீறில் பிரச்சனை எழுந்துள்ளது. இதனையடுத்து மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

 • சென்னை: தஞ்சை மாவட்ட மருத்துவ மாணவி சாந்திக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நிதியுதவி அளித்துள்ளார். முதலாம் ஆண்டு கட்டணம் ரூ.75 ஆயிரத்த்தை பெஸ்ட் சேரிடபிள் டிரஸ்ட் மூலம் நிதியை வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும் மாணவியின் முழு படிப்பு செலவையும் ஏற்பதாக தெரிவித்துள்ளார்.
 • விழுப்புரம் அருகே உள்ள சாலாமேடு பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் மகன் ஒருவரை முன்விரோம் காரணமாக சிலர் வியாழக்கிழமை இரவு அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
 • பெய்ஜிங் : சீன எல்லைப் பகுதியான ஷின்ஜியாங் மாகாணத்தை ஒட்டிய பகுததியில் சீனா மற்றும் பாகிஸ்தான் படைகள் முதல் முறையாக கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன
 • டெல்லி: தென் கொரியாவின் கியா மோட்டார்ஸ் அடுத்த மாதம் இந்தியாவின் முதல் ஆலையை நிறுவ உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கியா மோட்டார்ஸ் உலக அளவில் புகழ்பெற்ற ஆட்டோ மொபைல் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
 • மன்னார்குடி: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக விவசாயிகள் மற்றும் சிறுகுறு தொழில்முனைவோர் தெரிவித்துள்ளனர். மன்னார்குடியில் பேசிய தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், பெரிய விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி இல்லை என்ற அறிவிப்பு வேதனை அளிப்பதாக தெரிவித்தார்
 • சிறையில் ஜாதி குறித்து கேட்டு போலீஸார் கடுமையாக தாக்கினார்கள்: பியூஸ் மானுஷ்
 • சென்னை: சென்னை மதுரவாயல் – தாம்பரம் புறவழிச்சாலையில் பைக் ரேஸ் சென்ற 45 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாலையில் ரேஸ் செல்ல பயன்படுத்தப்பட்ட 22 இரு சக்கர வாகனங்களையும் போலீஸ் பறிமுதல் செய்துள்ளது.
 • அண்மையில் தில்லி உள்ளிட்ட நகரங்களில் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் இனவாதம் சார்ந்ததோ, குறிப்பிட்ட சமுதாயத்தினர் மீதான திட்டமிட்ட தாக்குதல்களோ அல்ல என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
 • பாசனத்திற்கு தண்ணீர் திறக்காவிட்டால் போராட்டம் : விவசாயிகள் எச்சரிக்கை
 • வேளாங்கண்ணி: வேளாங்கண்ணி பேராலய நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் 2 ஆயிரம் பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். பல கோடி வருமானம வரும் நிலையில் வளர்ச்சி திட்டப்பணிகள் எதுவும் செய்யவில்லை என புகார் தெரிவித்துள்ளனர். மருத்துவமனை தரம் உயர்த்துதல், கல்லூரி கட்டுவதாக தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
 • பாகிஸ்தானில் உள்ள பல்வேறு சிறைகளில் மொத்தம் 518 இந்தியர்கள் அடைக்கப்பட்டுள்ளதாக, வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார். இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் கடந்த 1-ஆம் தேதி பகிர்ந்து கொண்ட பட்டியலின்படி அந்நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளில் மொத்தம் 518 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 463 பேர் மீனவர்கள் ஆவர்.
 • சென்னை: சென்னையில் கபாலி திரைப்படம் வெளியான 18 தியேட்டர்களில் விற்பனை வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக விற்பனை செய்கிறார்களா என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். கூடுதல் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்துள்ளனர்.
 • சென்னை: சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது அதிமுக அரசுக்கு நெருக்கடி கொடுப்பது எப்படி என்பது குறித்து திமுக எம்எல்ஏக்களுக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் அறிவுரை கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

bhagwant-mann_650x400_81469171699

 • புதுடெல்லி: ஆம் ஆத்மியின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த எம்.பி., பக்வந்த் மன், விதிமுறைகளை மீறி பார்லிமென்ட் நடவடிக்கைகளை தனது மொபைல் போன் மூலம் பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.சுமார் 12 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில், அவர் வாகனத்தில் பாதுகாப்பு நடைமுறைகளை கடந்து பார்லி.,க்குள் நுழையும் காட்சி இடம்பெற்றுள்ளது.
 • ஆம் ஆத்மி எம்.பி. மீது அரசு நடவடிக்கை எடுக்காமல் அவையில் பாஜக பிரச்சனை எழுப்புவது ஏன் என மாநிலங்களவையில் பேசிய மார்க்சிஸ்ட் எம்.பி. சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்துக்குள் காரில் நுழைவதை வீடியோ எடுத்து எம்.பி. பகவந்த் வெளியிட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
 • ஆம்ஆத்மி எம்.பி. வெளியிட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் இருந்து நீக்காதது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ஆனந்த்சர்மா, மத்திய அரசுக்கு கேள்வி விடுத்துள்ளார்.
 • தாம் தவறு ஏதும் செய்யவில்லை மீண்டும் அதேபோல் வீடியோ வெளியிடுவேன் என எம்.பி. பகவந்த் பிடிவாதம் பிடித்துள்ளார்.
 • ஊட்டி : ஊட்டி அருகே செலவீப் நகர் பகுதியில் விளைந்த ராட்சத பீட்ரூட்டை கண்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வியப்படைந்தனர்.
 • கொடைக்கானல் : கொடைக்கானலில் 75 ஆண்டுகளை கடந்த அரசு பள்ளி, அடிப்படை வசதிகளின்றி பழுதடைந்த கட்டிடத்தில் இயங்குகிறது. மாணவர்கள் அச்சத்துடன் படித்து வருகின்றனர்.
 • கோரக்பூர்: உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உரத் தொழிற்சாலை மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி கோரக்பூர் சென்றடைந்தார். இந்நிலையில் அவர் அங்குள்ள கோரக்நாத் கோயிலில் பிரார்த்தனை செய்தார்.
 • டெல்லி: வரும் அக்டோபர் 18-ம் தேதி காவிரி பிரச்சனை தொடர்பான வழக்கு விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிபதி செல்லமேஸ்வர் விசாரணையில் இருந்து விலகியதால் புதிய அமர்வு இவ்வழக்கை விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி பிரச்சனை தொடர்பான வழக்கை விசாரிக்க புதிய அமர்வை ஏற்படுத்துமாறு தலைமை நீதிபதியிடம் கர்நாடக அரசு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்
 • எல்லையில் இந்திய ராணுவம் அதிக அளவு பீரங்கிகளை நிறுத்துவது இந்தியாவுக்கு வரும் சீன முதலீட்டை பாதிக்கும் என்று அந்நாட்டு அரசு ஊடகமான “குளோபல் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.
 • பழனி முருகன் கோவில் வருவாய் 24 நாள் வசூல் 1 கோடியே 71 லட்சத்து 37 ஆயிரத்து 625 ரூபாய் வெள்ளி : 11200 கிராம், தங்கம் 902 கிராம் வெளிநாட்டு கரன்சி :1182 நோட்டுகள்.
 • தாராபுரம் அருகே மேட்டுகடையில் லட்சுமி என்ற 45 வயது மதிக்கத்தக்க பெண்ணை கல்லால் அடித்து கொலை போலீசார் விசாரணை .சொத்து பிரச்சினை காரணமா என்ற கோணத்தில் விசாரணை .
 • சேலம்: சேலத்தில் தொழிலதிபர் ராஜ்குமாரை கடத்தி ரூ.20 லட்சம் பணத்தை 15 பேர் கொண்ட கும்பல் பறித்துச் சென்றது. கண்ணாடி விற்பனை செய்யும் ராஜ்குமார், ஓட்டுனர் உள்பட 4 பேரை இந்த கும்பல் ஆத்தூரில் காரில் கடத்தியது. ரூ.20 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டு தருமபுரியில் 4 பேரையும் விட்டுச் சென்றதாக எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார்.
 • சென்னை : கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வரும் தங்கம் விலையில் இன்று ஏற்றம் காணப்படும். தங்கம் விலை கிராமுக்கு ரூ.13ம், சவரனுக்கு ரூ.104 ம் அதிகரித்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2933 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ. 31,360 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.23,464 க்கு விற்பனையாகிறது. இதே போன்று ஒரு கிராம் வெள்ளி விலை 80 காசுகள் உயர்ந்து ரூ.51.20 ஆகவும், பார்வெள்ளி விலை ரூ.775 உயர்ந்து ரூ.47,880 ஆகவும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.