• 1முதல் வகுப்பு மாணவர்கள் விவரம்: ஆன்லைனில் பதிய உத்தரவு அரசுப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் முதல் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சார்ந்த தகவல் தொகுப்பு விவரங்களை, கல்வி தகவல் மேலாண்மை முறையில் (இஎம்ஐஎஸ்) இணையதளத்தில் பதிவு செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
  • பெண்கல்வி ஊக்கத் தொகை பெற ஆதார் எண் கட்டாயம் சமர்பிக்க வேண்டும், என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
  • தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: சிறப்பு உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 1 வரை விண்ணப்பிக்கலாம்
  • திருவண்ணாமலை விபத்தில் காயமடைந்தவர்கள்
    திருவண்ணாமலை விபத்தில் காயமடைந்தவர்கள்
  • தமிழகத்தில் புதிதாக எட்டு சார் கருவூல அலுவலகக் கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்..
  • சென்னை தீவுத்திடல் அருகே உள்ள போர் நினைவு சின்னத்தில் நிரந்தர தேசிய கொடியை முதல்வர் ஏற்றி வைத்தார்.
  • சென்னை தண்டையார்பேட்டையில் மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டத்தை முதல் ஜெயலலிதா அடிக்கல் நாட்டி தொடங்கினார்.
  • பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது விதமான மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், ஜூலை, 25 முதல் துவங்கும் என தமிழ்நாடு மருத்துவ பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.
  • இரட்டை சதம் அடித்த விராட் கோலி
    இரட்டை சதம் அடித்த விராட் கோலி
  • மே.இ.தீவுகளுக்கு எதிராக நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இரட்டைச் சதம் அடித்து உலக சாதனை புரிந்தார்.
  • துருக்கியில் 3 மாதங்களுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய் யப்பட்டுள்ளது என்று அதிபர் எர்டோகன் அறிவித்துள்ளார். அங்கு இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். துருக்கியில் ராணுவத்தின் ஒரு பிரிவினர் கடந்த 15-ம் தேதி இரவு அதிபர் எர்டோகனின் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்ட னர். ஆளும் ஏ.கே கட்சி, எதிர்க்கட்சி கள், பொதுமக்கள் ஒன்றிணைந்து ராணுவ புரட்சியை முறியடித்தனர்.
  • கடந்த மாதம் காபூலில் கடத்தப்பட்ட இந்தியப் பெண் ஜூடித் டிசௌஸா பத்திரமாக மீட்கப்பட்டதாக மத்திய வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
  • திருச்சி அருகே பதுக்கி வைத்திருந்த சுமார் 50 கிலோ கஞ்சாவை போலீஸார்  பறிமுதல் செய்தனர்.
  • திருவண்ணாமலை அருகே அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 25 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
  • ஜெர்மனியின் முனிச் நகரில், துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியல் 9 பேர் கொல்லப்பட்டதாகவும், துப்பாக்கி சூடு நடத்திய கொலைகாரன் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல்.
  • கபாலி படத்தின் முதல்நாள் வசூல் 40 கோடியாம்.
  • மாயமான இந்திய விமானத்தை தேடும் பணியில் விமானப்படை, கடலோர காவல்படை மற்றும் கடற்படை கப்பல்கள் 2-வது நாளாக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விமானம் கடலில் விழுந்து மூழ்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
  • உ.பி. பாஜக முன்னாள் தலைவர் தயா சங்கர் விவகாரத்தில், அவரது குடும்பத்தை அவதூறாக பேசியதற்காக பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
  • தென்மாநிலங்கள் சட்டப் பணிகள் ஆணைய மாநாடு புதுச்சேரியில் தொடங்கியது. உச்சநீதிமன்ற நீதிபதி அனில் ஆர்.தவே மாநாட்டை தொடங்கி வைத்து கூறியுள்ளார். சென்னை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவுல், ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
  • ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய நபரை தானேவில் கேரளா போலீஸ்  மற்றும் மஹாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கைது செய்யப்பட்டதாகக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • பாகிஸ்தான் அழகி  குவாண்டீல் பலோச் தனது சகோதரனால் கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த எனது மகனை சுட்டுக்கொல்ல வேண்டும் என அவர்களின் தந்தை ஆவேசமாக கூறியுள்ளார்.
  • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் 2 நாள் பயணமாக இன்று காஷ்மீர் செல்கிறார்.
  • குஜராத் மாநிலம் உனா என்ற இடத்தில் பசு மாடு தோலை உரித்த தலித் இளைஞர்கள் 4 பேரை  ஒரு கும்பல் கட்டிவைத்து அடித்து உதைத்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அவர்களை தாக்கிய  6 பேரையும் கைது செய்துவிட்டதாக குஜராத் காவல்துறை அறிவித்து உள்ளது.
  • திருவனந்தபுரம் சங்குமுகம் பகுதியில் தெருநாய்கள் கடித்து குதறியதில் அந்த பகுதியை சேர்ந்த 4 சிறுவர்கள் பலத்த காயமடைந்தனர். தெருவில் விளையாடிக்கொண்டிருந்தபோது நாய் விரட்டி விரட்டி கடித்ததாக சொல்லப்படுகிறது. சிறுவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.