Afternoon news

  •  ⁠⁠⁠காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி பேட்டி –  மானிய கோரிக்கை மீதான விவாதத்தை காங்கிரஸ் கட்சி புறக்கணிக்கிறது. பத்திரிக்கை தர்மம் மதிக்கப்படுவதில்லை. எதிர்க்கட்சிகள் ஊடகங்களை சந்திக்க கூடாது என்பதற்காகவே பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது
    அண்ணா பல்கலைகழகத்தில் 50 கோடி மதிப்பில் மோட்டார்வாகன தொழில்நுட்ப மையம் மதிப்பில் அமைக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார்.  ⁠⁠⁠50கோடி மதிப்பில் அண்ணா பல்கலைகழகத்தில் 5000 பேர் அமரும் வகையில் கூட்டரங்கம் கட்டப்படும்.
    ⁠⁠⁠மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை 4.75 கோடியில் அமைக்கப்படும்.
    பொறியியல் கல்லூரி மாணவர்கள் இந்திய பொறியியல் பணி தேர்வில் தேர்ச்சி பெறும் வகையில் பயிற்சி மையம் சென்னை, தர்மபுரி, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடத்தில் 10 லட்சம் செலவில் அமைக்கப்பட்டும்
    ⁠⁠⁠பொறியியல் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு பயிற்சி மையங்கள் திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்
    ஆண்டுதோறும் 10 அரசு பொறியியல் கல்லூரிகளின்  100 மாணவர்கள் 1.50 கோடி மதிப்பில் வெளிநாட்டிற்கு பயிற்சிக்கு அனுப்பப்படுவர்.
    தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் உள்ள கோபன்னா அறையை இளைஞர் காங்கிரசார் ஆக்கிரமித்தனர்.
    ⁠⁠⁠மேட்டுபாளையத்தில் அரசு கலைக்கல்லூரி – பேரவையில் முதல்வர் தகவல். மலைப்பிரதேச பகுதி பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட். தமிழ் நாடு திறந்த நிலை பல்கலை மையம் நீலகிரியில் அமைக்கப்படும். பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு முறை கொண்டுவரப்படும்.
    விஜயகாந்த் வழக்கு வரும் 26க்கு ஒத்திவைப்பு தமிழக அரசு தன் மீது தொடர்ந்துள்ள அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வக்கீல் ஆஜராவதற்கு மனுதாரர் விஜயகாந்த் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை வருகிற 26-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
    கோவில்பட்டி அருகே நடிகர் சவுந்தரராஜனின் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உசில்ம்பட்டியில் இருந்து சென்னை வந்துக் கொண்டிருந்த போது நடிகர் பயணம் செய்த கார் தீப்பிடித்தது. தீ விபத்தில் நடிகர் சவுந்தரராஜன் குடும்பத்தினர் காயம் இன்று தப்பினர். தர்மதுரை , எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சவுந்தரராஜன்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தாயைக் கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டி, அமச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி பாப்பா (50). இவர்களின் மகன் சேகர் (22). இவரது மனைவி தீபா (20). சேகர் சேலத்தில் உள்ள இனிப்பகத்தில் வேலை செய்து வருகிறார். விடுமுறைக்கு வீட்டிற்கு வந்துள்ளார். சேகருக்கும், தீபாவிற்கும் அடிக்கடி தகராறு வருமாம். செவ்வாய்கிழமை மனைவியுடன் சேகர் தகராறு செய்து பிரச்னை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த தாய் பாப்பா சண்டையை விலக்கி விட்டுள்ளார். இதில் ஆத்திரமுற்ற சேகர் தாயை பிடித்து தள்ளிவிட்டுள்ளார். இதில் காயமுற்ற பாப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து கூமாப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து சேகரைக் கைது செய்தனர்.
    ஆதி திராவிடர்களுக்கான கல்வி உதவித் தொகையை பட்ஜெட்டில் தமிழக அரசு ஒதுக்கவில்லை என புகார் சென்னை: ஆதிதிராவிடர்களுக்கான கல்வி உதவித் தொகையை பட்ஜெட்டில் தமிழக அரசு ஒதுக்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னையில் அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்க நிறுவனர் கிறிஸ்துதாஸ் காந்தி புகார் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஒதுக்கிய நிதியையும் முழுமையாக ஆதிதிராவிடர்களுக்குச் செலவிடவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். 
    பாமாயில் விலை ரூ.10 அதிகரிப்பு : எண்ணெய் விலை உயரும் அபாயம் மலேஷியாவில் இருந்து அதிக அளவு பாமாயிலை, சீனா கொள்முதல் செய்வதால், தமிழகத்தில் பாமாயில், லிட்டருக்கு, 10 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால், பிற எண்ணெய் வகைகளின் விலைகளும் உயரும் என, வியாபாரி கள் தெரிவித்துள்ளனர். 💥
     ஆதிதிராவிடர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க நிதி ஒதுக்காத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30-ம் தேதி ஆதிதிராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கையில் எதிர்க்கட்சிகள் எழுப்ப சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்க நிர்வாகிகள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
    சுவாதி கொலை வழக்கில் 10 நாளில் குற்றப்பத்திரிகை! சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் உருவமும், சிசிடிவி காட்சியில் பதிவான உருவமும் ஒப்பீடு செய்யும் பணி நடந்து வருவதாகவும், இந்த பணி முடிந்த உடன் இன்னும் 10 நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
     ஆந்திர பிரதேச அரசு சார்பில் விஜயவாடாவில் சிந்துவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தெலங்கானா மாநில அரசு சார்பில் நேற்று ஒலிம்பிக் வீராங்கனை சிந்துவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. திறந்தவெளி வாகனத்தில் சாலையில் அழைத்து செல்லப்படுகிறார் சிந்து. 
    4 கிலோ அரிசி அட்டைக்காக தாலுகா அலுவலகத்தில் தவமிருக்கும் மூதாட்டிகள் சிவகாசி : அரசு வழங்கும் 4 அரிசி அட்டையை பெறுவதற்காக, சிவகாசி தாலுகா அலுவலகத்தில் மூதாட்டிகள் தினந்தோறும் காத்துக்கிடக்கின்றனர். ஆதரவற்ற முதியோர்களுக்காக அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை மற்றும் 4 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் விருதுநகர் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான முதியோர் பயனடைந்து வருகின்றனர். மாதந்தோறும் 4 கிலோ அரிசி பெற, சம்மந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களில் முதியோர்கள் சான்று பெற வேண்டும். சிவகாசி தாலுகா அலுவலகத்தில், இந்த வருடத்திற்கான 4 கிலோ அரிசி அட்டையைப் பெறுவதற்காக ஏராளமான மூதாட்டிகள் காத்திருந்தனர். வட்ட வழங்கல் அதிகாரி இல்லாததால் புதன்கிழமை (நாளை) வந்து வாங்கிச் செல்லுங்கள் என்று அதிகாரிகள் திருப்பி அனுப்பி விட்டனர். இருப்பினும் சில மூதாட்டிகள் வட்ட வழங்கல் அதிகாரி வந்த பிறகு வாங்கி செல்கின்றோம் எனக் காத்திருந்தனர். 
    முதியோர் உதவித்தொகைக்கு லஞ்சம் வாங்குவோர் கைது கலெக்டர் உத்தரவு மதுரை : முதியோர் உதவித்தொகை வழங்கும் போது லஞ்சம் வாங்குவோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். 
    தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியாது! – இலங்கை திட்டவட்டம். இலங்கை கடற்படை யினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை எக்காரணத்திற்கா கவும் விடுவிக்க முடியாது என்று இலங்கை அமைச்சர் திட்டவட்டமாக கூறி உள்ளார்.
     ஜம்மு- காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீடித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை 46-ஆவது நாளாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
    கண்டித்த தாயை தீ வைத்து கொன்ற மகன் சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள திரிசூலம் கண்ணபிரான் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி வேல்தாய் அவர் சென்னை விமான நிலையத்தில் துப்புரவு செய்யும் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். 2-வது மகன் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றிவந்தான். இதனால் முருகன் மற்றும் வேல்தாய் அவனை தொடர்ந்து கண்டித்து வந்ததோடு, வேலைக்கு செல்லும்படியும் வலியுறுத்தி வந்தனர். இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வேல்தாய், மற்றும் 2-வது மகன் மட்டும் வீட்டில் இருந்தனர். அப்போது வேல்தாய் அவனை வேலைக்கு செல்லாமல் இருப்பதை கண்டித்ததால். இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரம் அடைந்த சிறுவன் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து வேல்தாய் மீது ஊற்றி தீ வைத்தான். இதில் வேல்தாய் உடலில் தீ பற்றி எரிய, அவர் அலறி துடித்தார் அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் வேல்தாய் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 வயது மகனை கைது செய்தனர்.
    ரியோ ஒலிம்பிக் மாரத்தான் போட்டியில் பங்கேற்றபோது இந்திய அதிகாரிகள் தண்ணீர் வழங்கவில்லை. இதனால் உயிரிழக்கும் நிலைக்கு சென்றேன் என்று இந்திய வீராங்கனை ஓ.பி.ஜெய்ஷா குற்றம்சாட்டியதை இந்திய தடகள சம்மேளனம் முற்றிலுமாக மறுத்துள்ளது. 💥
     மகேஸ்வரி கொலை வழக்கு… 3 பேரின் ஆயுள் தண்டனை உறுதி. சென்னையை அடுத்த சிறுசேரியில், ஐ.டி. பெண் ஊழியர் உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 பேரின் ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சென்னையை அடுத்த சிறுசேரியில், 2014-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி ஐ.டி. பெண் ஊழியர் உமா மகேஸ்வரி கடத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உத்தம் மண்டல், ராம் மண்டல், உஜ்ஜல் மண்டல் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. மேலும், உயிரிழந்த உமா மகேஸ்வரி குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையாக ரூ.2 லட்சத்தை 4 மாதத்தில் அளிக்க வேண்டும் என்றும், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.க்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
    கச்சத்தீவில் எங்களுக்கே முழு அதிகாரம் உள்ளது – இலங்கை அமைச்சர். கச்சத்தீவு விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் எங்களுக்கே முழுமையாக உள்ளது என இலங்கை மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீரா கூறியுள்ளார்
    எனக்கான விலையை இன்பாக்ஸில் சொல்லாதீர்கள்- நெட்டிசன்களை தலை குனியவைத்த இளம்பெண் பெண்ணை 14 வினாடிகள் உற்றுப்பார்ப்பது தொடர்பாக கேரள காவல்துறை அதிகாரி ஒருவர் வெளியிட்ட சர்ச்சை கருத்துக்கு கேரள இளம் பெண் எழுத்தாளர் ஒருவர் தனது முகநுாலில் கருத்து தெரிவித்திருந்தார். நெட்டிசன்கள் இதற்கு மோசமான எதிர்வினையாற்ற, அதற்கு இந்த இளம்பெண் அளித்த துணிச்சலான பதில் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.
    உ.பி.யில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் தடியடி : பெண்கள் உள்ளிட்டோர் காயம் கான்பூர்: உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை (புதன்கிழமை) முதல் செப்டம்பர் 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஐ.பி.எல். பாணியில் நடைபெறும் இந்த போட்டியில் 31 ஆட்டங்களுடன் 8 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. இப்போட்டி சென்னை சேப்பாக்கம், நத்தம் (திண்டுக்கல்), நெல்லை ஆகிய 3 இடங்களில் நடைபெறுகிறது. முதல் ஆட்டம் நாளை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மாலை 6.50 மணிக்கு நடக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் இவ்விரு அணிகளும் போட்டியிடுகின்றனர்.
    சமூக விரோதிகள் கூடாரமாக மாறிய விழுப்புரம் அரசு மருத்துவமனை  டாக்டர்கள் பணியில் இல்லாததால் கர்ப்பிணிகள் அலைக்கழிப்பு தேவாரம் : கோம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு வரக்கூடிய கர்ப்பிணிகளை அலைக்கழிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. 
    மருத்துவப்படிப்பில் தமிழக மாணவர்களின் எதிர்காலம் குறித்து விவாதம் தேவை: பாமக சென்னை: மருத்துவப்படிப்பில் தமிழக மாணவர்களின் எதிர்காலம் குறித்து விவாதம் தேவை என்று பாமக தெரிவித்துள்ளது. மருத்துவப்படிப்பில் சேர தேசிய பொது நுழைவுத் தேர்வால் ஊரக ஏழை மாணவர் வாய்ப்பு பறிப்போவதாக தெரிவித்துள்ளது. தனியார் மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கையை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாமக கோரிக்கை வைத்துள்ளது. 
    சட்டப்பேரவையில் இன்றைய அலுவல்களில் பங்கேற்காமல் புறக்கணித்தனர் காங்கிரஸ் உறுப்பினர்கள். திமுக எம்.எல்.ஏ-க்களின் சஸ்பெண்ட்டை சபாநாயகர் ரத்து செய்யாததால் காங்கிரஸ் உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர். இன்றைய சட்டமன்ற கூட்டத்தை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர்களுக்கும் புறக்கணித்தனர்.
    சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இறங்கல் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் தமிழர்களின் அடையாளமாக திகழ்நதவர் நாதன் என அவர் தெரிவித்துள்ளார்.
    பத்திரிக்கையாளருக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிறந்த நாள் விழாவில் தெரிவித்துள்ளார். கோயம்பேட்டில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் மாணவர்கள், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும் பிறந்த நாள் அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று தெரிவித்துள்ளார். 
    பரிவார் டைஸ்ரிஸ் & அலைய்டு விமிடெட் நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தோர் சென்னையில் பேரணி நடத்தினர். 5 லட்சம் பேரிடம் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த தெய்வேந்திரனைக்  கைது செய்ய வலியுறுத்தி முழக்கம் எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர். ராஜரத்தினம் அரங்கில் இருந்து லாங்ஸ் கார்டன் சாலை வரையிலான பேரணியில் 400 பேர் பங்கேற்றனர்.
    என்ன கொடுமை ஒலிம்பிக்கில் மெடல் வேண்டுமானால் எதையெல்லாம் செய்ய வேண்டும் என்று தொழிலதிபர் விஜய் மல்லையா பிரதமர் நரேந்திர மோடிக்கு டிவிட்டரில் யோசனை சொல்லி பரபரப்பை கிளப்பியுள்ளார். வங்கிகளுக்கு சுமார் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பாக்கி வைத்துள்ள தொழிலதிபர் மல்லையா, நெருக்கடி காரணமாக இங்கிலாந்து தப்பி சென்றுள்ளார். அவருக்கு இந்திய நீதிமன்றங்கள் பிடிவாரண்ட் பிறப்பித்தவண்ணம் உள்ளன. இந்நிலையில், சாத்தான் வேதம் ஓதுவதை போல, ஒலிம்பிக்கில் இந்தியா ஜெயிக்க, தலைமறைவு மல்லையா அட்வைஸ் செய்துள்ளார்.
    சட்டம் ஒழுங்கு பிரச்சனை: உத்திர பிரதேச சட்டசபையில் எதிர்க்கட்சிகள் போராட்டம் லக்னோ: மாநிலத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து எதிர்க்கட்சிகள் உத்திர பிரதேச சட்டசபையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    தேரூரில் திறக்கப்பட்ட மறுநாளே பூட்டப்பட்ட ரேஷன்கடை சுசீந்திரம் : சுசீந்திரம் அருகே உள்ள தேரூர் பேரூராட்சிக்குட்பட்ட தண்டநாயகன்கோணம், உதிரபட்டி, பாலகிருஷ்ணன்புதூர், கருப்புக்கோட்டை, தேரூர் ஆகிய ஊர்களில் மக்கள் பயன்பெறும் வகையில் தேரூர் 2வது வார்டு பால்பண்ணை அருகில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ₹5 லட்சத்தில் நியாயவிலை கட்டிடம் கட்டப்பட்டது. கட்டிடத்தை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பச்சைமால் கடந்த 26.2.2016 அன்று திறந்து வைத்தார். ஆனால் இந்த கட்டிடம் திறந்த மறுநாளே பூட்டு போட்டு பூட்டப்பட்டது. எனவே அப்பகுதி மக்கள் ஏற்கனவே உள்ள ேரஷன் கடையிலே பொருட்களை வாங்கி செல்கின்றனர். பழைய கடை தேருர் கூட்டுறவு சொசைட்டி பின்புறம் ஒரு சிறிய அறையில் செயல்படுகிறது.
    தூய்மை இந்தியாவை வலியுறுத்தும் நகராட்சி நிர்வாகம் குப்பைகள் அள்ள நடவடிக்கை எடுக்குமா? கோவை: கோவை மாவட்டம்,மேட்டுப்பாளையம் அண்ணாஜிராவ் ரோட்டிலிருந்து ஊட்டி ரோட்டிற்கு பிரிந்து செல்லும் ரோட்டில் எப்போதுமே இப்படித்தான் குப்பைகள் கொட்டப்பட்டு காணப்படுகின்றன. மதுபாட்டில்களும் இங்கு வீசி எறிகின்றனர்.சரியாக குப்பைகள் அள்ளாததால் இவ்வழியாக செல்லும் மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் மற்றும் காய்கறி மார்க்கெட்டிற்கு செல்லும் பொதுமக்கள் குப்பைகளால் ஏற்படும் துர்நாற்றத்தை தாங்கிக் கொண்டு செல்கின்றனர்.தூய்மை இந்தியா என்பதை வலியுறுத்தி டிஜிட்டல் பேனர் வைக்கும் நகராட்சி நிர்வாகம் வாரம் இருமுறை குப்பைகள் அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்கள் மற்றும் பள்ளி மாணவிகள் விருப்பம்.
    தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடும் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 15 சதவீதம் மழை மட்டுமே பெய்துள்ளதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த கால கட்டங்களில் 20 மாவட்டங்கள் மிதமான மழையை பெற்றுள்ளதாகவும், 12 மாவட்டங்கள் 1 சதவீத மழையை கூட பெறவில்லை என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இதன் காரணமாக தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டமும், அணைகளின் நீர் மட்டமும் வேகமாக குறைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் பகுதியில் உதவி விஞ்ஞானி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 💥💥💥💥💥💥💥💥💥💥💥
     ⁠⁠⁠குஜராத் சட்டசபையில் 44 காங்., எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தமிழகத்தில் 79 எம்எல்ஏ.,க்ள் சஸ்பெண்ட் செய்த சில நாட்களில் குஜராத்திலும் இது போன்ற மெகா சஸ்பெண்ட் நடந்துள்ளது.
    இடைநீக்கம் முடிந்தபின் பேரவையில் கலந்துகொள்வோம்: எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின்
    வஹர்லால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் சர்தார் வல்லபாய் படேல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டதாகப் பேசி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்