afternoon-news
கர்நாடகாவில் போராட்டம்: சட்டத்தை யாரும் கையில் எடுக்க கூடாது என உச்ச நீதிமன்றம் கண்டனம்/ உச்ச நீதிமன்ற உத்தரவை மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் மதிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.
காவிரியில்6 செப்டம்பர் 20 ஆம் தேதி வரை நாள்தோறும் 12 ஆயிரம் கன அடி நீரை திறக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர். நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவை ஒருவாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது எனவும் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
சென்னையில் உள்ள கர்நாடகா பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை, மாணவர்களின் பாதுகாப்பு கருதி பெற்றோரை வரவழைத்து மாணவ மாணவியர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறது பள்ளி நிர்வாகம், பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு !!
தமிழக கேரள எல்லையான பொள்ளாச்சி ஆனைப்பாடியில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது கேரள போலீசார் தடியடி.
கர்நாடகாவில் தொடந்து பதற்றம். தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்
தமிழக பதிவெண் கொண்ட தனியார் பஸ் கர்நாடக எல்லை அத்திப்பள்ளியில் அடித்து நொறுக்கப்பட்டது. பதற்றம்
மைசூரில் தமிழக பதிவெண் கொண்ட கார் எரிப்பு.
காவிரி மேற்பார்வை குழு கூட்டம் அதன் தலைவர் சசிசேகர் தலைமையில் டெல்லியில் தொடங்கியுள்ளது. கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தமிழக தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ், பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர் பங்கேற்றுள்ளனர்
அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் நுரையீரல் வீக்கத்தால் அவதிப்படுவதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர் -பொது நிகழ்ச்சி ஒன்றில் உடல்நலமின்றி அவதிப்பட்டதை அடுத்து, ஹிலரியின் நோய் கண்டறியப்பட்டுள்ளது என்றும், அவர் ஓய்வெடுக்க அறிவுறுத்தப் பட்டிருப்பதாகவும் அவருடைய மருத்துவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தொண்டையில் புரோட்டா சிக்கியதில் வாலிபர் மரணம்! -கோவை அருகே அம்மன்குளம் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ரஞ்சித் என்பவர் குடி போதையில் இருந்த போது புரோட்டாவை வேகமாக சாப்பிட்டதில் அது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்துள்ளார்.
உல்லாசமாக இருக்க மறுத்த பெண்ணை தீ வைத்து எரித்த வாலிபர், உடந்தையாக இருந்த கணவர் கைது. பெங்களூரில் கணவனின் துணையோடு பெண்ணை பலாத்காரம் செய்து வந்த அவரது மாமா அந்த பெண் மீது மண்ணெண்ணை ஊற்றி அவரை எரித்துள்ளார். இருவரும் கைது செய்யப்பட்டனர்.
முன்னாள் எம்.பி.யாக இருந்த நடிகை ரம்யா காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு ஆதரவாக போராட்டம் நடத்தவில்லை என்று கன்னட அமைப்பினர் குற்றம்சாட்டினர் -இதுகுறித்து ரம்யா அவரது டுவிட்டர் பக்கத்தின் பதிவில் கூறியிருப்பதாவது:- கர்நாடகா விவசாயிகளுக்கு எப்போதும் எனது ஆதரவு உண்டு. காவிரியில் திறந்த தண்ணீரில் மாண்டியா விவசாயிகள், விவசாயம் செய்து வருகின்றனர்.தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சனைக்கு நாம் தான் காரணம். நாம் ஏன் அந்த சூழ்நிலையில் இருக்கிறோம் என்றும், இந்த நிலையை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்றும் நம்மை நாமே கேள்வி கேட்க வேண்டும். சாலைக்கு வந்து போராடினால் தீர்வு கிடைக்காது, என்று கூறியுள்ளார்.
அமெரிக்க இரட்டை கோபுர தகர்ப்பு நினைவு தினத்தையொட்டி, தாக்குதலில் பலியானவர்களுக்கு பிரதமர் நரந்திர மோடி நினைவஞ்சலி செலுத்தினார் -இது குறித்தி, அவர் டுவிட்டரில் கூறியதாவது, “செப்டம்பர் 11-ம் தேதியில் மிகவும் முரண்பாடான இரண்டு வரலாற்று பிம்பம் அரங்கேறியுள்ளது. செப்டம்பர் 11 தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். இதே நாளில் தான் விவேகனந்தர் உலகப் புகழ்பெற்ற சிகாகோ உரையை அமெரிக்காவில் மேற்கொண்டுடார். அப்போது, அவர் இந்தியாவின் உயரிய கலாச்சாரத்தையும், சர்வதேச சகோதரத்துவத்தையும், நல்லிணக்கத்தின் வலிமையையும் வெளிப்படுத்தி ஏராளமான மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டார்.” என்றார்.
20 அடி பேனர் வைத்து பிரபல வீரரை இந்திய கிரிக்கெட் அணிக்கு அழைக்கும் ரசிகர்கள்! -துலீப் கோப்பையைக்கான இறுதிப் போட்டி நடைபெற்று வரும் நொய்டா மைதானத்தில் தான் இந்த சப்மவம் நடந்துள்ளது. மைதானத்தில், 20 அடி பேனரில், இந்திய அணியின் முன்னணி தொடக்க வீரராக திகழ்ந்த கவுதம் காம்பீரை மீண்டும் இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று அவரது ரசிகைகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள மாவோயிஸ்டுகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான ஆஷிஸ் யாதவ் என்பவரை இன்று பீகார்- ஜார்கண்ட் சிறப்பு பகுதி குழு பிரிவு பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்
இந்திய வம்சாவளியை சேர்ந்த கெயித் வாஸ், பிரபலமான எம்.பி. ஒருவர் செக்ஸ் புகாரில் சிக்கியது இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது தொழிலாளர் கட்சிக்கும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.தன் மீதான புகாரை ஏற்றுக்கொண்டுள்ள கெயித் வாஸ், இது தொடர்பாக வருத்தம் தெரிவித்து உள்ளார்.
ஜம்மு, காஷ்மீர் கலவரம் குறித்து டெல்லியில் நேற்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலை மையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சுமார் 1 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோ சகர் அஜீத் தோவல், புல னாய்வு பிரிவு தலைவர் தினேஷ்வர் சர்மா, எல்லைப் பாதுகாப்புப்படை அதிகாரி கே.கே.சர்மா, உள்துறை செய லாளர் அனில் கோஸ்வாமி உள்பட பலர் கலந்து கொண் டனர்.காஷ்மீரில் மீண்டும் அமைதியை நிலைநாட்டவும், பள்ளி, கல்லூரிகளை திறக்கவும் தேவையான நடவடிக்கைகளை பாதுகாப்பு படையினர் மேற்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்
தனது ”சூட்” அழுக்காகி விடும் என்பதால் பிரதமர் விவசாயிகளை சந்திப்பது இல்லை: ராகுல் காந்தி கடும் சாடல்
காஷ்மீரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல்
மீண்டும் ஒரு அணு ஆயுத சோதனை நடத்த வடகொரியா தயாராக உள்ளது: தென்கொரியா பரபரப்பு குற்றச்சாட்டு
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அணியில் கோஹ்லி(கேப்டன்), ராகுல், புஜாரா,
ரஹானே, விஜய், ரோஹித், அஸ்வின், சஹா, ஜடேஜா, ஷமி, இஷாந்த், புவனேஷ்வர் குமார், ஷிகர் தவான், மிஷ்ரா, உமேஷ் உள்ளிட்டோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்*
முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் கூடுதல் டிஜிபி (பொறுப்பு) ராஜேந்திரன் சந்தித்துள்ளார். சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜும் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்துள்ளார்
சென்னை மேயர் சைதை துரைசாமி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்
சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தை கலைராஜன் எதிர்ப்பாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர். தென் சென்னை வடக்கு மாவட்ட அதிமுக செயளாலராக கலைராஜன் உள்ளார். அ.தி.மு.க. நிர்வாகிகள் நியமனத்தில் கலைராஜன் முறைகேடு செய்தார் எனப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைராஜனை அதிமுக மாவட்டச் செயலர் பதவியில் இருந்து நீக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்
ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு ஜாகீர் நாயக் நன்கொடை அளித்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக டெல்லியில் பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தியது,
சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் புறநகர் ரயில்சேவை மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே கோட்ட மேலாளர் அனுபம் சர்மா தெரிவித்துள்ளார். பேசின்பிரிட்ஜில் 4 மற்றும் 5 வழித்தடம் பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
கர்நாடகம் இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஓசூர் அருகே அத்திப்பள்ளியில் கர்நாடக மற்றும் தமிழக வாகனங்கள் அனைத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. கர்நாடக வாகனங்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதன் எதிரொலியாக முன்னெச்செரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்
உ.பி., மாநில சுரங்கத்துறை அமைச்சர் பதவி நீக்கம்
தமிழகம் முழுவதும் மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சென்னை மேயர் சைதை துரைசாமி வீடு உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.இன்று காலை முதல் வருமான வரி அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். இதில் திண்டுக்கல்லில் இருக்கும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சி.ஐ.டி,. நகரில் இருக்கும் சென்னை மேயர் சைதை துரைசாமி வீடு , தாம்பரத்தில் இருக்கும் அவரது மகன் வெற்றியின் பண்ணை வீடு, கோவை ராஜவீதி, காந்திபுரம் கிராஸ்கட் ரோடு பகுதிகளில் உள்ள கீர்த்திலால் நகைக்ககடை , துடியலூர் சிம்ம நாயக்கன் பாளையம் வைர தொழிற்சாலை *
உட்லண்ட்ஸ் ஹோட்டலில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக நான்கு பேர் கைது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து, அக்கட்சியின் துணைத்தலைவர் கார்வேந்தன் ராஜினாமா.
காவிரி விவகாரத்தால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு: டிஜிபி, கமிஷனருடன் முதல்வர் ஜெயலலிதா அவசர ஆலோசனை. காவிரி பிரச்சினையால் தமிழகத்தில் வன்முறை சம்பவம் அதிகரித்துள்ள நிலையில், முதல்வர் ஜெயலலிதாவை தமிழக போலீஸ் டிஜிபி ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகிய உயர் அதிகாரிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். பெங்களூரில் தமிழக இளைஞர் தாக்கப்பட்டதற்கு எதிர்வினை தமிழகத்தில் வெடிக்கும் என தமிழ் மற்றும் திராவிட அமைப்புகள் எச்சரிக்கைவிடுத்தன. சீமானின் நாம் தமிழர் கட்சியினர் இன்று ராமேஸ்வரத்தில் கன்னட வேன் டிரைவரை அடித்தனர். வேனை நொறுக்கினர்.சென்னையில், உட்லேண்ட்ஸ் ஹோட்டலில் விஷமிகள் பெட்ரோல் குண்டு வீசினர். வளசரவாக்கத்தில், உடுப்பி ஹோட்டலை மூட வைத்தனர் நாம் தமிழர் கட்சியினர். பதற்றம் காரணமாக இரு மாநிலங்கள் நடுவே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், முதல்வர் ஜெயலலிதாவை டிஜிபி (பொறுப்பு) ராஜேந்திரன் இன்று திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார். சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜும் சந்திப்பின்போது உடனிருந்தார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது குறித்து அதிகாரிகளுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைக்கு ரூ.25 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சலைட் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்
ஜார்கண்ட் மாநிலம், கும்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் தலைக்கு 25 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த முக்கிய தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜார்கண்ட் மாநிலம், கும்லா மாவட்டத்தில் உள்ள பொராடி வனப்பகுதியில் நக்சலைட் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக நக்சல் ஒழிப்பு சிறப்பு கூட்டுப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிறப்பு அதிரடிப்படை மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் நேற்றிரவு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காட்டுக்குள் பதுங்கி இருந்த நக்சலைட்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர். கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
கேரளாவிலிருந்து மருத்துவ கழிவுகள் கொண்டு வந்து தோட்டத்தில் புதைப்பு இதுதொடர்பாக ராமபட்டணம் பகுதியை சேர்ந்த சாகுல் அமீது (47) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய வேன் டிரைவர் உள்ளிட்ட சிலரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்
மதுரை மீனாட்சி மிஷன் டாக்டர் சேதுராமன் வீடு மற்றும் அலுவலகம் உட்பட 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரில் தமிழ் இளைஞர்கள் கன்னட வெறியர்களால் தாக்கப்பட்டதை கண்த்தும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவமதிப்பு செய்யும் விதமாக கழுதை மீது ஜெயலலிதாவின் புகைப்பட ஏற்றி ஊர்வலமாக சென்றதையும், உருவ பொம்மை எரித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில துணை செயலாளர் தீணன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் காந்திரோடு பெரியார் தூன் அருகே கர்நாடக முதல்வர் சித்தராமையா உருவ பொம்மையை எரித்து கர்நாடக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரரிமை கட்சி மாநில துணை செயலாளர் தீணன் மற்றும் தமிழக வாழ்வுருமை கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்துனர்.