Random image

மதிய செய்திகள்

📡தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட ஹர்திக் படேல் 9 மாதங்களுக்கு பிறகு விடுதலை,

சூரத்: தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஹர்திக் படேல் இன்று விடுதலை செய்யப்பட்டார். சூரத்தில் உள்ள லாஜுப்போர் சிறையில் இருந்து 9 மாதங்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார்.

ஹர்திக் படேல்
                                                     ஹர்திக் படேல்

📡சேலத்தில் தடையை மீறி காமராஜர் சிலையை திறந்ததால் பரபரப்பு

சேலம்: சேலத்தில் தடையை மீறி காமராஜர் சிலையை திறந்த காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதால் பரபரப்பு எற்பட்டது. சேலம் எருமைபாளையத்தில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஒராண்டு முன் சிலை நிறுவப்பட்டது. போலீஸ் அனுமதி மறுத்து வந்த நிலையில் காமராஜர் பிறந்தநாள் ஒட்டி தடையை மீறி சிலையை திறந்தனர்

📡டில்லியில் திருப்பூர் மருத்துவர் மர்ம மரணம்: மத்திய அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும்: வைகோ

டில்லியில் திருப்பூர் மருத்துவர் சரவணன் மரணம் குறித்து உரிய விசாரணையை மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் மேற்கொள்ள தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

📡விஜயகாந்த் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: விஜயகாந்த் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விஜயகாந்த் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜெயலலிதா பதில் அளிக்க நோடீஸ் அனுப்பியுள்ளது.

📡நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

புதுக்கோட்டை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மனைவி பாலாமணி. ஒரு விடுதியில் வேலை செய்து வருகிறார். இன்று (வெள்ளிக்கிழமை) காலை வேலைக்கு சென்று கொண்டிருந்தார். நகரப்பகுதியில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் செல்லும்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற மர்ம நபர்கள் பாலாமணி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு சென்றுவிட்டனர். காலை நேரத்தில் மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் துணிச்சலாக நகையை அறுத்துச் சென்ற சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📡கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 4 சிறைப்பிடிப்பு

பாம்பன்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர். பாம்பனைச் சேர்ந்த 4 மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படை சிறைப்பிடித்து சென்றது.

📡நைஸ் தாக்குதல்: பந்து போல பறந்த உடல்கள்.. நேரில் பார்த்தவர்கள் நடுக்கத்துடன் பேட்டி நைஸ், பிரான்ஸ்: பிரான்ஸ் நைஸ் நகரத் தாக்குதலின் போது, டிரக்கில் சிக்கிய மனிதர்கள் எழுப்பிய அபயக் குரல்கள் இன்னும் தன் காதுகளில் ஒலிப்பதாகவும், உடல்கள் பந்து போல் சிதறி விழுந்ததைத் தான் கண்ணால் கண்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்ட செய்தியாளர் ஒருவர் அதிர்ச்சி விலகாமல் பேட்டியளித்துள்ளார்.

📡தங்கம் விலையில் மாற்றமில்லை

சென்னை : தங்கம் விலையில் இன்று மாற்றமின்றி காணப்படுகிறது. அதேசமயம், பார்வெள்ளி விலை ரூ.150 அதிகரித்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி, ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2930 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.31330 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.23,440 ஆகவும் உள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.52.20 ஆகவும், பார்வெள்ளி விலை ரூ.150 அதிகரித்து ரூ.48745 ஆகவும் உள்ளது.

📡அடிப்பது நீ.. பெயர் எனக்கு..உலகையே சிதற விடும் ஐஎஸ்.. திகிலடிக்கும் தாக்குதல்கள்! பாரிஸ்: உலகின் பல பகுதிகளிலும் நடைபெறும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு சிரியாவை முக்கிய மையமாக திகழ்ந்து வருகிறது. இங்கிருந்துதான் உலகம் முழுவதும் தாக்குதல் நடத்தும் நபர்களுக்கு ஊக்கமும், தைரியமும், உத்வேகமும் போய்ச் சேருகிறது. உலகம் முழுவதும் விரவிக் கிடக்கும் ஐஎஸ் தீவிரவாதிகள் மற்றும் அதன் விசுவாசிகள் தங்களது பகுதிகளில் தாக்குதலை நடத்தி உலகையே நடுங்க வைத்து வருகின்றனர்.

📡சுவாதி கொலை வழக்கு: ராம்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. புலன் விசாரணை முடியாததால் ராம்குமாரை ஜாமீனில் விடுவிக்க முடியாது என நீதிபதி கூறியுள்ளார். ராம்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது

📡8 பேர் உயிரை காப்பாற்றிய டாபர்மேன்… 4 நாகங்களுடன் சண்டையிட்டு உயிரிழந்தது! ஒடிசாவில் எஜமானரின் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக 4 நாகப்பாம்புகளுடன் சண்டையிட்டு டாபர்மேன் நாய் உயிரிழந்துள்ளது

📡காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள நிலைக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மரியாதை விருதுநகர்: விருதுநகரில் காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள நிலைக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மரியாதை செலுத்தினார். காமராஜரின் 114 வது பிறந்த நாளை ஒட்டி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

📡வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 91 புள்ளிகள் உயர்வு மும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 91 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த நான்கு நாள் வர்த்தகத்தில் குறியீடு 815.17 புள்ளிகளாக உயர்ந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 91.36 புள்ளிகள் உயர்ந்து 28,033.47 புள்ளிகளாக உள்ளது. நுகர்வோர் சாதனங்கள், நுகர்வோர் பொருட்கள், தொழில்நுட்பம், ரியாலிட்டி மற்றும் சுகாதாரம் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 1.30% வரை அதிகரித்திருந்தது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 19.55 புள்ளிகள் அதிகரித்து 8,584.55 புள்ளிகளாக உள்ளது.

📡ரூ.3 லட்சத்திற்கு மேல் ரொக்க பரிவர்தனைக்கு தடை : கறுப்பு பண சிறப்பு புலனாய்வு குழு பரிந்துரை

புதுடெல்லி: கருப்பு பணத்தை ஒழிக்க ரொக்க பரிவர்த்தனைக்கு ரூ.3 லட்சம் என்ற வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்று சிறப்பு புலனாய்வு குழு வலியுறுத்தியுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி எம்.பி.ஷா தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு தனது 5-வது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு தேவையான வழிமுறைகளை அந்த குழு பரிந்துரை செய்துள்ளது. அதில் கணக்கு காட்டப்படாத பணத்தை ரொக்கமாக பதுக்கி வைத்து பயன்படுத்துவதால் அதற்கு முடிவுகட்ட பல்வேறு நாடுகளில் உள்ள சட்டங்களின் அடிப்படையில் ரொக்க பண பரிவர்த்தனைக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது

📡கொடைக்கானல் டாஸ்மாக் கடைகளில் விடிய விடிய மது விற்பனை

கொடைக்கானல்: மதுக்கடைகளில் விற்பனை நேரம் குறைக்கப்பட்டாலும் கொடைக்கானலில் விடிய விடிய மதுவிற்பனை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை மற்றும் கீழ்மலை கிராமங்களில் 30-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் விடிய விடிய மதுவிற்பனை படுஜோராக நடைபெறுகிறது. இரவு நேரங்களில் மதுபாட்டில்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், புகார் எழுந்துள்ளது.

📡குளச்சல் துறைமுகத்திற்கு

எதிர்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதம்

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தை இனயத்தில் அமைப்பதை கண்டித்து கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். நீரு கிராமத்தில் 10 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

📡சென்னை உயர்நீதிமன்றத்தில் திருக்கோவிலூரை சேர்ந்தவர் தீக்குளிக்க முயற்சி

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் திருக்கோவிலூரைச் சேர்ந்த குப்பன் என்பவர் தீக்குளிக்க முயற்சித்துள்ளார். உயர்நீதிமன்ற வக்கீல் மகேந்திரன் ரூ.2 லட்சம் பெற்றுக்கொண்டு வழக்காடாமல் ஏமாற்றியதாக புகார் தெரிவித்துள்ளார். மகேந்திரன் மீது பார் கவுன்சிலில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என குப்பன் குற்றம்சாட்டியுள்ளார்.

📡கால்நடை மருத்துவப்படிப்பில் சேர பொது கலந்தாய்வு இன்று முடிவடைகிறது

கால்நடை மருத்துவப்படிப்பில் சேர சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரியில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு புதன்கிழமை நடைபெற்றது. வியாழக்கிழமை பொது கலந்தாய்வு தொடங்கியது. கலந்தாய்வில் கலந்துகொண்டு இடங்களை தேர்ந்து எடுத்த எஸ்.ஜேன்ஸ் டெனிசன், எ.கனிமொழி, எம்.கண்மணி, ஆர்.ஹரிஷ், எஸ்.மணிகண்டன், பி.கல்பனா, எஸ்.ஆனந்தராமன், கே.லோக பிரியா, பி.குப்புசாமி, எஸ்.கார்த்திக் உள்ளிட்ட மாணவ-மாணவிகள் 17 பேர்களுக்கு அவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கான ஒதுக்கீட்டு ஆணையை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி வழங்கினார்.

இன்று (வெள்ளிக்கிழமை) கலந்தாய்வு முடிவடைகிறது.

📡சிலை கடத்தலில் ஈடுபடும் கணவனை கைது செய்ய வேண்டி மனைவி போலீசில் புகார்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை அடுத்த கல்லங்காட்டுவலசை சேர்ந்தவர் ரத்னா (வயது-25). இவரது கணவர் சதீஷ் (வயது-33). நேற்று காலை, 7 மணியளவில் சதீஷ் மற்றும் அவரது தந்தை செல்வம் இருவரும் இரண்டு சாக்கு பைகளில், ஆறு சுவாமி சிலைகளை வீட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.

இத சிலைகள் குறித்து ரத்னா விசார்த்தபோது, அவர்கள் இருவரும் சிலைக்கடத்தலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதைதொடர்ந்து, “இனிமேல் ‘இது போல் சட்ட விரோத செயல்களை செய்யக்கூடாது. இந்த சிலைகளை கொண்டுபோய் போலீசில் கொடுத்துவிடுங்கள்” என சதீஷிடம் கூறிய ரத்னா அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்

இதனால், ஆத்திரமடைந்த சதீஷ், ரத்னாவின் கண்ணத்தில் அறைந்துவிட்டு சிலைகளை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டார். பின்னர், ரத்னா இதுகுறித்து குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார்.

அதில், ‘சிலை கடத்தல், கள்ள நோட்டு மாற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் எனது கணவர் சதீஷ் மற்றும் மாமனார் செல்வம் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, தெரிவித்துள்ளார்.

போலீசார் விசாரணையில், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகிலுள்ள வட்டமலையில், சிலை திருட்டு சம்பவத்தில் சிக்கிய சதீஷை அங்குள்ள மக்கள் கட்டிப் போட்டு அடித்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

📡மாணவர்களுக்கு “கஞ்சா” விற்பனை செய்தவர் கைது

நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே உள்ள கொளப்பள்ளி மற்றும் அய்யன்கொல்லி பகுதிகளில், கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக, சேரம்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்த விசாரணையில், சேரம்பாடி காவல் உதவி ஆய்வாளர் இராஜி உட்பட போலீசார், இப்பகுதிகளில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில், கொளப்பள்ளி ஸ்கூல்ரோடு பகுதியை சேர்ந்த சந்திரன்(வயது-31) என்பவர் கல்லுாரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பதை கண்டறிந்து, அவரை கைது செய்ததுடன், அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இவருடன் கஞ்சா விற்பனையில் தொடர்புடைய மற்ற ஆட்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

📡உடுமலை அருகே ராணுவ பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 6-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ராணுவ பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 6-ம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

📡கோவை குற்றாலத்தில் தொங்கும் மரப்பாலத்தை முறையாக பராமரிக்க கோரிக்கை

கோவை குற்றாலத்தில் தொங்கும் மரப்பாலத்தை முறையாக பராமரித்து சுற்றுலாப்பயணிகள் பயன்பாட்டிற்கு அனுமதிக்க வேண்டும் என்று கொங்குநாடு ஜனநாயக கட்சி (KJK) கோரிக்கை விடுத்துள்ளது.

📡ராம்குமருக்கு எதிராக வலுவான ஆதரங்கள் உள்ளது: காவல் துறை

சென்னை: சுவாதி கொலை வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டு, ராம்குமார் மீண்டும் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

📡மோகனூர் சாலையில் உள்ள வங்கியில் கொள்ளை முயற்சி

நாமக்கல்: மோகனூர் சாலையில் உள்ள சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

📡சென்னை விமான நிலையத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ. 4 கோடி மதிப்புள்ள கேட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

📡தேமுதிகவில் வரிசையாய் விழும் விக்கெட்டுகள்… இன்றும் பலர் கட்சி தாவ ரெடியாம்!

சென்னை: தேமுதிக என்னும் கூட்டை விட்டு பல மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் பறந்து விட்டனர். இன்னும் சில மாவட்ட செயலாளர்கள் பறக்க தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜயகாந்திடம் இருந்து விலக தயாராக உள்ளவர்கள் சந்திரகுமார் அணியினர் பேசிய திமுகவிற்கு இணைக்க முயற்சி செய்து வருகின்றனர். அதே நேரத்தில் அதிமுக பக்கம் செல்லவும் சிலர் தயாராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

📡போலீஸ் காவல் முடிகிறது: இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் ராம்குமார்

📡கமல் நலமாக உள்ளார்: சந்திரஹாசன்

நடிகர் கமல்ஹாசன் நலமாக உள்ளதாக அவரது அண்ணன் சந்திரஹாசன் தெரிவித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கமலை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் சந்திரஹாசன் கூறியது:- கமலுக்கு காலில் ஏற்பட்ட எலும்புமுறிவைச் சரி செய்ய அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதம் முதல் ஒன்றரை மாதம் கழித்து கமல் இயல்பாக நடக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

📡கிருஷ்ணகிரி  ஓசூர் சாணமாவு வணபகுதில்    ஒற்ற யானை    தஞ்சம்     வணபகுதிக்குள்  யாரும்  அடு  மாடு   மேச்சலுக்கு  செல்லவேண்டாம், மற்றும்  இரவு நேரங்களில் பாதுகாப்பாக செல்லவேண்டும்   என வனத்துறையினர் வணபகுதி  ஒட்டியுள்ள  பிர்ஜெப்பள்ளி, சானமாவு, ராமாபுரம்,ஆழியாளம், பாத்துகோட்டா, பண்ணப்பள்ளி உள்ளிட்ட   கிராமக்களுக்கு  அறிவுறுத்தல்

 

📡ஆவடி திருநின்றவூர் அருகே கொடுக்கல் வாங்கல் தகராறில் பெண்ணை காரில் கடத்திய 3 பெண்கள் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.

📡காஞ்சிபுரம் – ஸ்ரீபெரும்பத்தூர் – வெங்காடு அருகே பன்னாட்டு நிறுவன வேன் டயர் வெடித்து விபத்து.மொத்தம் 16 ஆண்கள் காயம் 4 பேர் மேல் சிகிச்சைக்காக சென்னை அனுப்ப படுகின்றன. ஸ்ரீபெரும்பத்தூர் மருத்துவமனையில் இணை இயக்குநர் விஜயகுமார் நேரில் சென்று ஆய்வு

📡காஞ்சிபுரம் மாவட்டம் சூணாம்பேடு அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி  – காவல்துறை விசாரணை.

📡பிரான்ஸில் தீவிரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்

பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் நடந்த தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் பாதிக்கப்பட்ட சகோதர, சகோதரிகளின் துயரத்தை இந்தியா பகிர்ந்து கொள்கிறது என்றும் மோடி தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.