நவ.30, டிசம்பர் 1ந்தேதி மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

டில்லி:

வ.30 மற்றும் டிச.1 ம் தேதிகளில் தமிழக கடலோர பகுதிகளில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் ஓரிரு உள் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறி உள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் , புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு இல்லை சென்னை உட்பட அனைத்து இடங்களிலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் கூறி உள்ளது.

கடந்த 16ந்தேதி தமிழகத்தின் வேதாரண்யத்தில் கரையை கடந்த கஜா புயல் பேரழிவை ஏற்படுத்திச் சென்ற நிலையில், அதைத்தொடர்ந்து காற்றதழுத்த தாழ்வு மற்றம் மேலடுக்கு சுழற்றி காரணமாகவும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. சில இடங்களில் கன மழையும், ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்த நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக மழையின்றி வெயில் அடித்து வருகிறது.  இது மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வருகிற  30-ந்தேதியும், டிசம்பர் 1-தேதியும்   தமிழக கடலோர பகுதி மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளிலும் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக   இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.