Random image

அரசியலில் மீண்டும் தீவிரம்….நடிகர் கார்த்திக் அறிவிப்பு

மதுரை:

அரசியலில் மீண்டும் தீவிரமாக இறங்கவுள்ளேன் என்று நடிகர் கார்த்திக் கூறினார்.

கார்த்திக்

திரைப்பட நடிகர் 7 ஆண்டுகளுக்கு முன் பார்வர்டு பிளாக் கட்சியில் சேர்ந்தார். பின்னர் அக்கட்சியின் தமிழக மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். 2009-ல் நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியை தொடங்கினார். நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகரில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் மதுரையில் நடிகர் கார்த்திக் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ 2 ஆண்டுக்கு பிறகு மீண்டும் தீவிர அரசியலில் இறங்க உள்ளேன். இன்னும் 3 நாட்களுக்கு பின் கட்சியின் பெயரில் சிறிய மாற்றமும், நிர்வாகிகள் மாற்றமும் செய்து மதுரையில் அறிவிக்க திட்டமிட்டுள்ளேன்’’என்றார்.