46 வருடங்களுக்குப் பின் மீண்டும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியாகிறது , எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா நடித்த மாட்டுக்காரவேலன்.

இதில்  எம்.ஜி.ஆர்., இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். இந்தப்படத்தில்  கே.வி. மகாதேவன் இசையில் கண்ணதாசன் மற்றும்  வாலி இருவரும் எழுதிய பாடல்கள் இன்றைக்கும்  ரசிக்கவைக்கும்.

ப. நீலகண்டன் இயக்கத்தில் 1970-ல், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருடன், லட்சுமி, அசோகன், வி.கே.ராமசாமி, சோ மற்றும் பலர் நடித்த படம் இது.

தற்போது  மெருகேற்றப்பட்ட வண்ணக்கலவையில், 5.1 ஒலி அமைப்பில், சினிமாஸ்கோப் திரைப்படமாக  வெளியாகிறது.