நாளை வெளியாகும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ‘அகலாதே’ பாடலின் லிரிக் வீடியோ…!

--

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை.

வரும் ஆகஸ்ட் 8ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. பாலிவுட்டில் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் வந்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கா இப்படம் உருவாகியுள்ளது..

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க போனி கபூர் தயாரித்துள்ளார்.

இந்த நிலையில், வித்யா பாலன் மற்றும் அஜித் இருவரும் இணைந்து பாடும் 4ஆவது லிரிக் வீடியோ எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி அஜித் மற்றும் வித்யா பாலன் பாடும் அகலாதே என்ற பாடலின் லிரிக் வீடியோ நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.