கருணைக் கொலையின் வலியைப் பேசும் ‘அகம் திமிறி’….!

 

‘அகம் திமிறி’ என்னும் 50 நிமிடக் குறும்படம் 16 விருதுகள் பெற்றுச் சாதனை புரிந்துள்ளது. ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வசந்த் பாலசுந்தரம் கருணைக் கொலை குறித்தும், அதைச் சட்டமும், பொதுச் சமூகமும் எதிர்கொள்ளும் சூழல் குறித்தும் விவாதத்தை எழுப்பியிருக்கிறார் .

சிறப்புநிலைக் குழந்தைகள், மருத்துவம் பார்க்க வசதியில்லாமல் தினம் போராடும் குழந்தைகள் ஆகியோரின் வலிமிகுந்த வாழ்வை 50 நிமிடப் படத்தில் காட்சிப்படுத்தினார் இயக்குநர் வசந்த் பாலசுந்தரம்.

விரைவில் யூடியூபிலும் வெளியிட இருக்கிறது .