டில்லி

கொரோனாவால் இந்தியாவில் உயிர் இழந்தோரின் வயதுவாரியான விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸால் மரணமடைந்தோர் எண்ணிக்கை  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   இன்று மாலை 5 மணி நிலவரப்படி இந்தியாவில் 14,792 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  இதில் 488 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இன்று வரை 2015 பேர் குணம் அடைந்துள்ளனர்.  பாதிப்பு அடைந்தோரில் 29.8% பேர் குறிப்பிட்ட இடத்தோடு தொடர்பு உள்ளோர் ஆவார்கள்.

இந்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் லவ் அகர்வால், “ கொரோனாவால் இந்தியாவில் உயிர் இழந்தோர் விகிதம் 3.3% மட்டுமே ஆகும்.   வயது அடிப்படையில் ஆய்வு நடத்தியதில் 45 வயது வரை உள்ளோர் 14.4% பேர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர்.

அடுத்ததாக 45 முதல் 60 வயதானோர் 10.3%,  மற்றும் 60 முதல் 75 வரை உள்ளோர் 33.1% உயிரிழந்துள்ளனர்.  அடுத்தபடியாக 75 வயதுக்கு மேற்பட்டோர் 42.2% பேர் உயிர் இழந்துள்ளனர். ” என அறிவித்துள்ளார்.