அக்னி 3 :  முதல் முறையாக இரவில் நடந்த ஏவுகணை சோதனை

ப்துல் கலாம் தீவு, ஒரிசா

நேற்று முதல் முறையாக இரவில்  நடந்த ஏவுகணை சோதனையில் அக்னி 3 ஏவுகணை சோதிக்கப்பட்டது.

இந்தியா தனது அக்னி ஏவுகணைகளை நடுத்தர தூரம் முதல் கண்டம் விட்டு கண்டம்  பாயும் அளவு வரை உருவாக்கி வருகிறது.   இதில் அக்னி 1 ஏவுகணை முதல் அக்னி 3 ஏவுகணை வரை பயன்பாட்டில் உள்ளன.   அக்னி 4, அக்னி 5 மற்றும் அக்னி 6 ஆகிய ஏவுகணைகள் சோதனை நிலையில் உள்ளன.

இதில் அக்னி 3 ஏவுகணை 3500 கிமீ முதல்முதல் 5000 கிமீ வரை தாக்கும் திறனுடையதாகும்.    இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்டதாகும்.  மற்றும் அணு ஆயுதங்களை இந்த ஏவுகணை மூலம் செலுத்த முடியும்.  இந்த ஏவுகணை 17 மீட்டர் நீளமும் 2 மீட்டர் விட்டமும் கொண்டதாகும்.

ஏற்கனவே பயன்பாட்டுக்கு அனுப்பப்பட்ட இந்த ஏவுகணை நேற்று இரவு 7.20 மணிக்கு ஒரிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் உள்ள சோதனைத் தளத்தில் இருந்து சோதனை செய்யப்பட்டது.   இந்த சோதனை வெற்றி அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   இரவு நேரத்தில்  ஏவுகணை சோதனை நடப்பது இதுவே முதல்முறையாகும்.

கார்ட்டூன் கேலரி