உ.பி.யில் தொடரும் பெயர் மாற்றம்: ஆக்ரா பெயரையும் மாற்ற பாஜக கோரிக்கை

லக்னோ:

த்தரபிரதேச மாநிலத்தில் யோகி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்றது முதல் பல்வேறு முக்கிய நகரங்களின் பெயர்களை மாற்றி வருகிறது.

இந்த நிலையில், புகழ்பெற்ற தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ராவை, ‘அகரவால்’ என பெயர் மாற்றக்கோரி பாஜகவினர் மாநில அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்றது முதல், பாரதிய ஜனதா ஆட்சி செய்து வரும் பல்வேறு மாநிலங்களில் உள்ள பிரபலமான நகர்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சமீபத்தில், புகழ்பெற்ற அலகாபாத் நகரின் பெயரை பிரயாக் ராஜ் என பெயர் மாற்றப்படும் என யோகி அறிவித்து, அதற்காக கேபினட் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து,  முசாபர் நகரின் பெயரை லட்சுமி நகர் என பெயர் மாற்ற வேண்டும் என்று பாஜக அமைப்பான பஜ்ரங்தள் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், பைசாபாத் நகரை அயோத்தி என்று பெயர் மாற்றம் செய்ய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் அமைந்துள்ள பிரபல நகரின் பெயரான ஆக்ராவை, அகரவால் என மாற்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பாஜக எம்எல்ஏ ஜகன் பிரசாத் கார்க், ‘ஆக்ராவுக்கு அகரவால் என்று பெயர் மாற்றம் கோரி தனது முதல் பிசாரத்தை தொடங்கி உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கார்க், ‘ஆக்ரா என்ற பெயருக்கு என்ன அர்த்தம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பியவர், அந்த இடம் முன்னாள் அடர்ந்த காட்டுப்பகுதியாக இருந்தாகவும், அங்கு அகர்வால் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வந்தனர் என்று புதிய விளக்கத்தை கொடுத்துள்ளார்.

இதன் காரணமாகவே ஆக்ரா என்ற பெயருக்க பதிலாக அகரவன் அல்லது அகரவால் என்று பெயர் மாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய கலாசாரத்தை மீட்கவே இந்த பெயர் மாற்றங்களை செய்து வருவதாகவும், உத்தர பிரதேசத்தில் இன்னும் பல நகரங்களின் பெயர்கள் மாற்றியமைக்கப்படும்’ என்று பாஜக எம்எல்எ சங்கீத் சோம் கூறி உள்ளார்.

You may have missed