கடன்: விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டாம்! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை,

மிழக விவசாயிகளிடம் பயிர்க்கடன் தொடர்பாக கூட்டுறவு வங்கிகள் நோட்டீஸ் அனுப்ப வேண்டாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

விவசாயிகளிடம் பயிர்க்கடன்களை வற்புறுத்தி வாங்க வேண்டாம் என்று அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று  அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளுக்கான கூட்டுறவு வங்கி  பயிர்கடன்கைளை குறிப்பிட்ட அளவு ரத்து செய்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.

ஆனால், தேசிய வங்கிகளில் வாங்கிய கடன்களை ரத்து செய்யப்படவில்லை. தேசிய வங்கிகள் மத்திய அரசின் கண்காணிப்பில் செயல்படுவதால், அதை மத்திய அரசுதான் ரத்து செய்ய வேண்டும்.

இந்நிலையில் தமிழகத்தில் தற்போது வரலாறு காணாத அளவு வறட்சி தாண்டவமாடுகிறது. இதன் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வேதனையிலும், அதிர்ச்சியாலும் மரணத்தை தழுவி உள்ளனர். பலர் தற்கொலை செய்துக்கொண்டும் உயிரை மாய்த்துக்கொண்டனர்.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், விவசாய கடன்களை ரத்து செய்யக்கோரி தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லியில் ஒரு மாதத்துக்கு மேல் போராட்டம் நடத்தினர்.

ஆனால், மத்திய அரசு விவசாயிகளின் போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை. அதையடுத்து தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உத்தரவாதம் கொடுத்ததின்பேரில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

இந்தநிலையில், நேற்று தமிக முதல்வமர  அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் சந்தித்து பேசினர். அப்போது, விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அதைத்தொடர்ந்து கூட்டுறவு வங்கிகளுக்கு சங்கப் பதிவாளர் ஞானசேகரன்  சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாய கடன்களை வற்புறுத்தி திரும்பப் பெறக்கூடாது. மறு உத்தரவு வரும்வரை கடனை திருப்பிக் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டாம்.

குறுகிய கால பயிர்க்கடனை மத்திய கால கடனாக மாற்ற வேண்டும். தகுதியுள்ள விவசாயிகளுக்கு விவசாய கடன்களை விரைந்து வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.

You may have missed