வேளாண் படிப்பு: இன்று சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு தொடங்கியது…

கோவை:

தமிழகத்தில்  வேளாண் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது முதல் நாளான இன்று சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் வேளாண் படிப்புகளுக்கு மாணவ மாணவிகளிடையே நல்ல வரவேற்பு உண்டு. இந்த ஆண்டும், ஏராளமான மாணவ மாணவிகள், வேளாண் படிப்புக்கு  விண்ணப்பித்து உள்ளனர்.  ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி கடந்தமாதம்  ஜூன் 17ஆம் தேதி முடிவடைந்து, பின்னர்  ஜூன் 22ந்தேதி  தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் கோவை வேளாண் பல்கலையில் , இன்று கலந்தாய்வு தொடங்கியது.

முதல்நாளான சிறப்பு பிரிவு மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.   143 இடங்களுக்கு இன்று ககலந்தாய்வு நடைபெற்று வருகிறது.