கடன் தள்ளுபடி என்பது விவசாயிகளின் உரிமை: டில்லி பேரணியில் ராகுல்

டில்லி:

லைநகர் டில்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்டு பேசும்போது,  விவசாய கடன் தள்ளுபடி கேட்பது விவசாயிகளின்  உரிமை என்று கூறினார்.

தேசிய வங்கிகளில் உள்ள விவசாயக் கடன் தள்ளுபடி , உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டில்லியில் அனைத்து மாநில விவசாயிகள் ஒன்றிணைந்து 2 நாட்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ் உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துஇருந்தன.

2 நாட்கள் போராட்டம் காரணமாக டில்லியே ஸ்தம்பித்தது. நேற்று டில்லி ராம்லீலா மைதானத் தில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி மிக பிரமாண்டமான அளவில் விவசாயிகள் பேரணி நடைபெற்றது. மஹாராஜா ரஞ்சித் சிங் சாலை, ஜந்தர் மந்தர் டால்ஸ்டாய் சாலை வழியாக  சென்ற விவசாயிகள் பேரணியில் ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள், கல்லூரி மாணவ மாணவி கள், தொற்சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள்  உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தில் தமிழக்ததில் இருந்து விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலும் விவசாயிகள் சென்று கலந்துகொண்டனர்.

போராட்டத்தின் இறுதியில் நடைபெற்ற கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி.ராஜா, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்பட பலர் பங்கேற்று பேசினர்.

விவசாயிகள் பேரணியில் பேசிய ராகுல்காந்தி, மோடி ஆட்சிக்கு வந்தால் விவசாய விளைப்பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவோம் என கூறினார். ஆனால், அவர் கொடுத்த வாக்குறுதி எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என்று கடுமையாக சாடினார.

மேலும், விவசாயக் கடன் தள்ளுபடி என்பது விவசாயிகளின் உரிமை. அவர்கள் அதனை அன்பளிப்பாக கோரவில்லை என்று பேசியவர்,  கார்பபேரட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி வழங்கும் மத்திய அரசு விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய மறுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

விவசாயிகள் அனில் அம்பானியிடம் இருந்து விமானங்களை எதிர்பார்க்கவில்லை… அவர்களுக் கான உரிமைக்காகவே போராடுகிறார்கள் என்றும் கூறினார்.