புயலால் விழுந்த மரங்களை நல்ல விலைக்கு விற்க வேளாண்துறை ஏற்பாடு!  

புயலால் விழுந்த மரங்களை அப்புறப்படுத்த விவசாயிகள் உழவன் செல்போன் செயலி மூலம் பயன்பெறலாம் என தமிழ்நாடு வேளாண்துறை அறிவித்துள்ளது.

கடந்த (நவம்பர்) மாதம் 16-ஆம் தேதி வீசிய கஜா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.  லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டன.

அரசின் நிவாரணப்பணிகள் நடந்துகொண்டிருந்தாலும் அது போதாத நிலையில் பல நூறு தன்னார்வலர்கள் தாங்களாக முன்வந்து நிவாரண உதவிகள் செய்து வருகிறார்கள்.

ஆனாலும் புயலால் தங்கள் மரங்கள் எல்லாம் விழுந்துவிட்டதால் விவசாயிகள் தங்கள் எதிர்காலம் குறித்து அச்சத்தில் இருக்கிறார்கள். தவிர விழுந்த மரங்களை என்ன செய்வது என்றும் தெரியாமல் தவித்துவருகிறார்கள்.

இந்நிலையில் புயலால் விழுந்த மரங்களை அப்புறப்படுத்த விவசாயிகள் உழவன் செல்போன் செயலி மூலம் பயன்பெறலாம் என வேளாண்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் இம்மரங்களை நல்ல விலைக்கு விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர்களின் நேர்முக உதவியாளர்களின் செல்போன் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை – 9443463976, திருவாரூர் – 7399753318, நாகை – 9443655270, புதுக்கோட்டை – 9443532167.

விவசாயிகள் தொடர்புகொள்ள: புதுக்கோட்டை: சத்தியமூர்த்தி – 9442591433, நரேஷ் – 9442591409, தஞ்சை: சுரேஷ் – 9442591417, நாகை: ரவி – 9442591408, சிவகங்கை: பிரபாகரன்.

#Agriculture #department  #arranged #sell #trees #gajastorm #goodPrice