Random image

வேளாண் மண்டலம் மசோதா: தேர்வுக்குழுவுக்கு அனுப்பாததை கண்டித்து திமுக வெளிநடப்பு

சென்னை:

மிழக அரசு இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் ஆக அறிவித்த  மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பாததை கண்டித்து சட்டமன்றத்தில் தி.மு.க. வெளிநடப்பு செய்தது.

காவிரி டெல்டா மாவட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான மசோதா தமிழக முதல்வர் எடப்பாடியால் தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்,  இந்த சட்ட மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என  வலியுறுத்தினார்.

ஆனால், வேளாண் மண்டல மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப முடியாது என்று தமிழகஅரசு அறிவித்து, மசோதாவை  சட்டசபையில் நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது.