அகஸ்டா ஹெலிகாப்டர் முறைகேடு விவகாரம்: இடைத்தரகர் மிச்சல் தலைமறைவு
அகஸ்டா வெஸ்ட்லேண்டு ஹெலிகாப்டர் முறைகேடு விவகாரம் தொடர்பாக இடைத் தரகர் கிறிஸ்டியன் மிச்சலை நாடு கடத்த துபாய் நீதி மன்றம் உத்தரவிட்ட நிலையில், அவரை காணவில்லை என்று அவரது வழக்கறிஞர் கூறி உள்ளார்.

இந்தியாவின் விவிஐபிக்கள் பயணம் செய்வதற்காக இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்டு நிறுவனத்திடமிருந்து 12 சொகுசு ஹெலிகாப்டர்களை வாங்க 2007ம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது. இந்த ஒப்பந்தத்துக்கான இடைத்தரகராக செயல்பட்டவர் இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ்டியன் மிச்சல்.
இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தபோது, அகஸ்டா வெஸ்ட்லேண்டு நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஃபின்மெக்கனிக்கா லஞ்சம் கொடுத்த புகார் ஒன்றில் சிக்கியது. அதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை கடந்த 2014ம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஒப்பந்தத்தில் இடைத்தரகரனா மிச்சலை இந்தியா அழைத்து வர சிபிஐ முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. இதற்கிடையில், கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் மிச்சல் கைது செய்யப்பட்டார் மிச்சல். அவர் மீது துபாய் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. அந்த வழக்கில் மிச்சலை நாடு கடத்த துபாய் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் மிச்சலை காணவில்லை என்று அவரது வழக்கறிஞர் அமல் அல்ஸுபீயி அதிர்ச்சி தகவலை கூறி உள்ளார். நீதிமன்றம் தனது சரணடைய உத்தரவிட்டதால் அவர் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், அவரை கண்டறிந்தால் உடனே கைது செய்யப்படுவார் என்றவர், இதுகுறித்து அவர் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடும்”, என்றும் கூறினார்.
இந்த வழக்கின் விசாரணையின்போது, மிச்சலின் வழக்கறிஞர் அமல் அல்ஸுபீயி வாதாடும்போது, ‘கிரிமினல் வழக்கிலிருந்து தப்பிக்க, சோனியா காந்தியைக் காட்டிக் கொடுக்கச் சொல்லி சிபிஐ தங்களை வற்புறுத்தியது என்று பரபரப்புக் குற்றச்சாட்டை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த குற்றச்சாட்டை சிபிஐ மறுத்துள்ளது.
அகஸ்டா வெஸ்ட்லேண்டு முறைகேடு விவகாரத்தில் முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி.தியாகி சென்ற ஆண்டு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.