அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டா் பேர வழக்கு: கிறிஸ்டியன் மிஷெல் ஜாமீன் வழங்க அரசு எதிா்ப்பு

டெல்லி:

கஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டா் பேர வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள  கிறிஸ்டியன் மிஷெலுக்கு  ஜாமீன் வழங்க அரசு துறைகளான சிபிஐ, அமலாக்கத்துறை கடும்  எதிா்ப்பு தெரிவித்து உள்ளது.

காங்கிரஸ் ஆட்சியின்போது,  முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்ய ரரூ. 3600 கோடி மதிப்பில் 12 ஹெலிகாப்டர்கள் வாங்க இத்தாலியைச் சோந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம்  அரசு ஒப்பந்தம் போட்டது. இதில் முறைகேடு எழுந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், இந்த ஒப்பந்தம் கடந்த 2014 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில், ஒப்பந்தம் பெறும் நோக்கில் இத்தாலி நிறுவனம்  இந்தியாவைச் சோந்தவா்களுக்கு பல கோடி ரூபாயை அந்த நிறுவனம் லஞ்சமாகக் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.  இதுதொடா்பாக, சிபிஐயுங்ம  சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த ஹெலிகாப்டர் ஒப்பந்தத்துக்கு   இடைத்தரகராகச் செயல்பட்டதாகக் கருதப்படும் பிரிட்டன் நாட்டவரான கிறிஸ்டியன் மிஷெல் ஈடுபட்டு வந்தார். அவரை கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் துபையிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு, கடந்த ஆண்டு (2019)  ஜனவரி 5 முதல் நீதிமன்றக் காவலில் திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

சுமார் 1ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மிஷெல் ஜாமின் வழங்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அவரது மீனுமீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், மிஷெல் ‘உயரதிகாரிகள் வட்டாரத்தில் நெருங்கிய தொடா்பும், செல்வாக்கும் உள்ள நபரான மிஷெலுக்கு ஜாமீன் வழங்கினால், அவா் வழக்கில் தனக்கு எதிரான சாட்சியங்களை அழிக்க முற்படுவாா்’ என்று கூறி, அவருக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.

இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 26-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைக்கப்பட்டது.