குஜராத்தில் நாளை புத்த மதத்துக்கு மாறும் 300 தலித்கள்

காந்திநகர்:

குஜராத் மாநிலம் உனா தாலுகா சமிதியா கிராமத்தில் பாகுபாடுக்கு எதிராக போராடி வந்த தலித் குடும்பத்தை சேர்ந்த 300 பேர் புத்த மதத்திற்கு நாளை மாறுகின்றனர். இதில் 2016ம் ஆண்டு ஜூலை மாதத்தில் பசு பாதுகாவலர்களால் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, அரை நிர்வானமாக உனா நகரப்பகுதியில் இழுத்துச் செல்லப்பட்டவர்களும் அடங்குவர்.

மதம்மாறும் தலித்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. மதம் மாறும் தலித்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்த பூர்ணிமாவை முன்னிட்டு மோடா சமித்தியா கிராமத்தில் நாளை நடக்கும் நிகழ்ச்சியில் இவர்கள் புத்த மதத்தில் தங்களை இணைத்து கொள்கின்றனர்.

போர்பந்தரில் இருந்து புத்த மத துறவி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க அழைக்கப்பட்டுள்ளார். உள்ளூர் அரசியல் தலைவர்களுக்கும் இந்த விழா அழைப்பிதழ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.