காந்தி வேடமிட்டு வங்கியில் கடன் கேட்கும் வேட்பாளர்… நாமக்கல்லில் பரபரப்பு

நாமக்கல்:

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தேர்தல் செலவுக்காக வங்கிகளில் கடன் கேட்டு வருகிறார். அதுவும் காந்தி வேடமிட்டு கடன் கேட்டு வருகிறார்.. அவரை வங்கி அதிகாரிகள் விரட்டியடிக்கின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, நாமக்கல் தொகுதியில், அதிமுக, திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு எதிராக  அகிம்ஸா சோசியலிஸ்ட் கட்சி  வேட்பாளராக  ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார்.

இவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், தேர்தல் செலவுக்கு பணம் இல்லாததால், காந்தி வேடம் தரித்து, கையில் கம்புடன் தனது பாஸ்போர்ட், ஆதார் அட்டைகளை அடமானமாக வைத்துக்கொண்டு  ரூ.50 லட்சம் பணம் வழங்குங்கள் என்று வங்கிகளின் கதவை தட்டி வருகிறார்.

இவரது நடவடிக்கையை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பல வங்கிகள் அவரை விரட்டியடித்துவிட்ட நிலையில், இறுதியாக நாமக்கல்  நாமக்கல் ஸ்டேட் வங்கி கிளைக்கு சென்று கடன் பிரிவு மேலாளரிடம் மனு கொடுத்துள்ளார்.

மனுவை பெற்றுக்கொண்ட வங்கி மேலாளர், பின்னர் சொல்வதாக கூறி  அவரை அனுப்பி விட்டார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய வேட்பாளர் ரமேஷ்,   தேர்தல் செலவுக்கு என்னிடம் பணம் இல்லை. வங்கியில் 50 லட்சம் ரூபாய் கடன் கேட்டிருக்கிறேன். தன் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர் என்றார். கடன் கிடைக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்து உள்ளார்.

ஆகா… கடன்வாங்க இது புது ஐடியாவா இருக்கே…. மோடி ஆட்சியில்  காந்தி கடன் வாங்கவும் தயாராகிவிட்டார் போல…. 

Leave a Reply

Your email address will not be published.