காங்கிரஸ் பொருளாளராக அகமதுபடேல் நியமனம்

டில்லி:

காங்கிரஸ் பொருளாளராக அகமது படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன்பு சோனியாகாந்தியின் அரசியல் ஆலோசகராக இருந்தார், பொருளாளராக இருந்த மோதிலால் வோரா, புதிதாக உருவாக்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாக பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் வெளியுறவு விவகாரத்துறை தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மாவும், அஸ்ஸாம் தவிர்த்த வடகிழக்கு மாநிலங்களின் பொறுப்பாளராக லுஜின்ஹோ பெலாரியோவும் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் சபாநாயகர் மீராகுமார் செயற்குழு நிரந்தர அழைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.