ராஜீவ்காந்தியின் நண்பர் அகமது பட்டேலுக்கு பொருளாளர் பதவி: அகில இந்திய காங்கிரசில் அதிரடி மாற்றம்

டில்லி:

கில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் அரசியல் ஆலோசகரும், நண்பருமான அகமது பட்டேல் எம்.பி.  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அசோக் கெலாட் அறிவித்து உள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றது முதல் கட்சியில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். தற்போதைய அரசியல் சூழல்களை எதிர் கொள்ளும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு மாநில காங்கிரஸ் கட்சி யின் நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ள நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு  காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வந்த ஜனார்த்தன் திரிவேதி  மாற்றப்பட்டு, புதிய பொதுச்செயலாளராக அசோக் கெலாட் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், தற்போது மீண்டும் பல நிர்வாகிகளை மாற்றி அதிரடி நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

அதன்படி, ராஜீவ்காந்தியின்நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக அகமது படேல் பொருளாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் கடந்த ஆண்டு குஜராத் மாநிலத்தில் இருந்த மாநிலங்களை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் (நிர்வாகம்) நியமிக்கப்பட்டுள்ளார். அதுபோல காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு அலுவல்கள் துறை தலைவராக இருந்து வந்த டாக்டர் கரன்சிங் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் ஆனந்த் சர்மா நியமிக்கப்பட்டு உள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான   லூயிசினோ ஃபலேரியோ பொதுச்செயலாளர் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளா.

மேலும், காங்கிரஸ் பெண்கள் அமைப்பின் நிரந்தர அழைப்பாளராக  வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த மீரா குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் ஒப்புதலின் பேரில், பொதுச்செயலாளர் அசோக் கெலாட் அறிவித்து உள்ளார்.