டில்லி:

குஜராத் முதல்வர் விஜய் ரூபணி மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடர காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமாக அகமது படேல் முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக சோனியாகாந்தியின் அரசியல் செயலாளர் சட்ட வல்லுனர்களுட் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குஜராத் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தோல்வி பயம் காரணமாக குஜராத் முதல்வர் விஜய் ரூபணி அவரது கட்சியின் பழமையான தந்திரத்தை கையாள தொடங்கியுள்ளார். குஜராத் முன் மாதிரி மாநிலம் என்ற போலி கதைக்கு இது வரை அவர்களால் பதில் கூற முடியவில்லை.

அதனால் தேர்தல் பிரச்சாரத்தை மத ரீதியில் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார். அகமதுபடேலை தீவிரவாத இயக்கங்களோடு தொடர்புபடுத்தி பேசியுள்ளார். இது குறித்து வழக்கு தொடர்வது குறித்து அகமது படேல் ஆலோசனை செய்து வருகிறார். தற்போது நீதிமனறங்கள் வார விடுமுறையில் உள்ளது. அடுத்த வார இறுதிக்குள் வழக்கு தொடரப்படும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக அகமதுபடேலில் ராஜ்யசாப எம்பி தேர்தல் வெற்றியை பறிக்க பாஜக முயற்சி செய்தது. இந்த விவகாரத்தை காங்கிரஸ் தொண்டர்கள் சமூக வலை தளங்களில் தீவிர பிரச்சாரம் செய்தனர். ஐஎஸ்ஐஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த வாலிபர்களை சமீபத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்களில் ஒருவன் அகமது படேல் அறங்காவலராக இருந்த ஒரு மருத்துவமனையில் பணியாற்றியுள்ளான் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அகமதுபடேல் எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று விஜய் ரூபணி தெரிவித்துள்ளார்.

அறங்காவலர் பதவியை அகமது படேல் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பரில் ராஜினாமா செய்துவிட்டார். அதனால் கடந்த 4 ஆண்டுகளாக மருத்துவமனையில் அகமதுபடேலுக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.