“அரசியலில் அபூர்வமான மனிதர் அகமது படேல்” – சோனியா காந்தி புகழாரம்..

 

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகரான அகமது படேல் அண்மையில் காலமானார்.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ‘நேஷனல் ஹெரால்ட்’ பத்திரிகையில் சோனியா காந்தி, உருக்கமான மடல் தீட்டியுள்ளார். அதில் “அரசியலுக்கு வருவோர் பொதுவாக மற்றவர்கள், தன்னை பற்றி பேச வேண்டும் என நினைப்பார்கள், தங்களை முன்னிறுத்திக்கொள்வார்கள், ஆனால் தன்னை ஒரு போதும் முன்னிறுத்தாமல் பின்னணியில் இருந்து செயல்பட்ட அபூர்வ மனிதர் அகமது படேல்’’ என குறிப்பிட்டுள்ளார்.

“காங்கிரஸ் கட்சிக்கு தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட அகமது படேல், பதவியை பயன்படுத்தி ஆதாயம் அடைய விரும்பியவர் அல்ல” என தெரிவித்துள்ள சோனியா காந்தி “எனது நம்பிக்கைக்கு உரிய சகாவாக அவர் விளங்கினார். 1980 களுக்கு பிறகான காங்கிரஸ் வரலாறு எழுதப்படும் போது, அதில் அகமது படேலுக்கு பிரதான இடம் இருக்கும்” என மேலும் கூறியுள்ளார்.

– பா. பாரதி