Random image

குஜராத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை: பில்லி சூனியம் காரணமா?

அகமதாபாத்:

குஜராத்தின் அகமதாபாத் அருகே உள்ள பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் பில்லி சூனியம் காரணமாக தற்கொலை செய்துள்ளனரான என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அகமதாபாத்தின் கிருஷ்ண நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மர்மமான சூழ்நிலைகளில் மூன்று பேர் இறந்து கிடந்தனர். அந்த வீட்டில் இருந்து ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் எழுதியுள்ள தகவல்களில் பில்லி சூனியம் காரணமாக தற்கொலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை செய்துகொண்ட குணால் தனது மனைவி மற்றும் மகளுடன்

தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தலைவர் பெயர் குணால் திரிவேதி (வயது 45), அவரது மனைவி மற்றும் 16 வயதான மகள்  ஷிரின். இவர்கள் அவனி ஸ்கை என்ற பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர்.

சம்பவத்தன்று அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பல முறை போன் செய்தும், அவர்களது போன் கால்களை யாரும் எடுக்காததால் சந்தேகமடைந்த குணாலின் உறவினர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது அவர்கள் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

காவல்துறையினர் வீட்டிற்குள் சென்று இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது குணால் தூக்கு மாட்டியும், அவரது மனைவி மற்றும் மகள் விஷம் அருந்தியும் இறந்துள்ளது தெரிய வந்தது. மேலும், அதே வீட்டில்  குணாலின் தாயார் மயக்க நிலையில் மீட்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து குணாலின் வீட்டில் ஆய்வு மேற்கொண்ட காவல்துறையினர், அங்கிருந்து குறிப்பு ஒன்றை கண்டெடுத்துள்ளனர். அதில், எழுத்தப்பட்டுள்ள தகவலின்படி, குணால் குடும்பத்தினர்  பில்லி சூனியத்தில் மிகவும் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

குணால் எழுதியுள்ள குறிப்பில்,  தனது தாய் தன்னை எப்போதும் புரிந்துகொள்ளவில்லை என்றும், பில்லி சூனியம் மற்றும் அதன் பவர் குறித்து பலமுறை அவரிடம் கூறியும் அவர் தன்னை நம்பவில்லை என்றும், நீ குடிப்பதால் இப்படி பேசுகிறாய் என்று தன்னை கூறியதாகவும் எழுதி உள்ளார்.

மேலும், நான் மற்றும் எனது குடும்பத்தினர் தற்கொலை செய்து கொள்ள விரும்பவில்லை, ஆனால் அவ்வாறு செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும்  [சூனியம் காரணமாக], எனது தாயார் கடவுள் பக்தி கொண்டவர்,  கடவுளின் பவர் எளிதில் கைவிடாது என்றும் தெரிவித்துள்ளார்.

இறுதியில், தங்களது தற்கொலைக்கு ஜிக்னேஷ்பாய்தான் பொறுப்பு என்றும், சிங்கம் விடைபெறு கிறது….எல்லோரும் எங்களது நிலைமையைக் கண்டனர்… ஆனால் யாரும் எதுவும் செய்ய முடியாது. ”

என்றும் எழுதி உள்ளார்.

குணாலின் கடிதம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருப்பதாகவும், அவர் கூறிய ஜிக்னேஷ்பாய் யார் என்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குணாலின் தாய் நலம்பெற்று திரும்பினால், குணால் குடும்பத்தினர் தற்கொலை குறித்து தெரிய வரலாம் என்றும் காவல்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.