உலகத்திலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அகமதாபாத்தில் கட்டுப்பட்டு வரும் நிலையில் அதன் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. சுமார் 700 கோடி ரூபாய் செலவில் இந்த கிரிக்கெட் மைதானம் கட்டுப்பட்டு வருகிறது.

largest

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உலகத்திலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டு வருகிறது. சுமார் ரூ.700 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த மைதானத்தில் ஒருலட்சம் பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியை காண முடியும்.

கட்டப்பட்டு வரும் இந்த கிரிக்கெட் மைதானத்தின் புகைப்படத்தினை குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் துணை தலைவர் பரிமல் நத்வானி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், ”மாநில கிரிக்கெட் சங்கத்தின் கனவு நனவாகப்போகிறது, இது நாட்டை பெருமைப்படுத்தக் கூடிய ஒரு அடையாளமாக விளங்கும்” என பதிவிட்டுள்ளார்.

உலக அளவில் மிகப்பெரிதாக கட்டப்பட்டு வரும் இந்த கிரிக்கெட் மைதானம் 63 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படுகிறது. இதில் 3,000 கார்கள் மற்றும் 10 ஆயிரம் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படும் அளவிற்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மூன்று பயிற்சி எடுக்கும் மைதானமும், உள்ளூர் கிரிக்கெட் அகாடமியும் இதில் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் பாதசாரிகள் மற்றும் வாகனங்க இயக்கத்தை இணைக்கும் விதமாக தனி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் உள்ள கிளப்பில் 55 அறைகளும், ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளமும் அமைக்கப்பட்டுள்ளது மைதானத்தின் கூடுதல் சிறப்பாகும்.