கவல்பூர், பாகிஸ்தான்

ந்தியாவில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பில்லை என பாகிஸ்தான் பிரதமர் கூறி வரும் வேளையில் பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் மசூதி இடிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் வசித்து வரும் இஸ்லாமியர்களில் அகமதியாஸ் என்னும் ஒரு பிரிவினர் உள்ளனர்.   இவர் எண்ணிக்கையில் மிகவும் சிறுபான்மையினராக உள்ளனர்.  கடந்த 1974 ஆம் வருடம் பாகிஸ்தான் அரசு இவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல என அறிவித்து இவர்களுடைய பல அடிப்படை உரிமைகளைப் பறித்தது.

இவர்களில் சிலர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பகவல்பூரில் வசித்து வருகின்றனர்.  இந்த நகரில் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தலைமையகம் உள்ளது.  ஜெய்ஷ் இ முகமது இயக்கம் இந்தியாவில் புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட  பல பயங்கரவாத செயல்களை நடத்தி உள்ளது.

நேற்று முன் தினம் இரவு இந்நகரில் உள்ள அகமதியாஸ் தொழுகை நடத்தும் மசூதி ஒன்றை பாகிஸ்தான் காவல்துறை இடித்து ஒரு பகுதியை சேதப்படுத்தி உள்ளது.  இது அப்பகுதி மக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.  அப்பகுதி மக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியா சமீபத்தில் விதி எண் 370 ஐ விலக்கிக் கொண்டு காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது.   இதற்குப் பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சிறுபான்மையினருக்கு இந்தியாவில் பாதுகாப்பில்லை எனக் குறை கூறி வரும் வேளையில் பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் மசூதி இடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.