தி நகர் கோயிலில் ஆடையில்லா அகோரிகள்

சென்னை

சென்னை தி நகரில் உள்ள ஒரு கோயிலுக்கு அகோரிகள் ஆடை இல்லாமல் வந்து பிரார்த்தனை செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

சென்னை மாநகரில் தியாகராய நகர் பகுதியில் உள்ளது வெங்கட நாரயணப் பெருமாள் கோயில்.  இது இந்தப் பகுதியில் மிகவும் புகழ் பெற்ற கோயில்.   இன்று சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் தங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் வந்திருந்தனர்.

திடீரென்று அந்த கோயிலுக்குள் அகோரிகள் நிர்வாணமாக வந்து பிரார்த்தனை செய்தனர்.  இது மிகவும் பரபரப்பை உண்டாக்கியது.  மேலும் அங்கிருந்த பெண்கள் இதைக் கண்டு மருண்டனர்.  குழந்தைகளும் அங்கு நிறைய இருந்தனர்.  பல பக்தர்கள் முகம் சுளித்தனர்.  பிறகு அந்த அகோரிகள் கோவிலில் இருந்து வெளியேற்றப் பட்டனர்.

தற்போது கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.