செயற்கை நுண்ணறிவு மூலம் போலி கைரேகை உருவாக்க முடியும்…! அதிர்ச்சி தகவல்கள்

நியூ யார்க் :

செயற்கை நுண்ணறிவு மூலம் ஒருவரின் விரல் ரேகையை போலவே போலி கைரேகை உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போதைய டிஜிட்டல் மயத்தில் செல்போன், டேப்டாப், லாக்கர்ஸ், வீட்டின் கதவுகள் போன்றவற்றிற்கு பயோ மெட்ரிக் எனப்படும் கை ரேகைகளை பதிவு செய்து அதன் மூலமே அதை பெரும்பாலோர் இயக்கி வருகின்றனர்.

இந்த முறையிலான இயக்கம் நம்பகத்தன்மை கொண்டது என அனைவரும் நினைத்திருக்கும் வேளையில், போலியான கைரேகைகளையும் உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் நிரூபித்து உள்ளனர்.

அமெரிக்காவில் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் (NYU) ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு செயற்கை நுண்ணறிவு கருவியை உருவாக்கி உள்ளனர்.  இந்த கருவி மூலம் போலி மனித கைரேகைகளை தொகுத்து காண்பித்து உள்ளனர்.

இதுவரை நாம் நம்பகத்தன்மை வாய்ந்ததாக கருதப்படும் பயோமெட்ரிக் பதிவுகள், இந்த கண்டு பிடிப்பின் மூலம் தவிடு பொடியாகி உள்ளது.

பயோமெட்ரிக் அமைப்புகளில் இருக்கும் ஆபத்துகள் குறித்து அமெரிக்காவில் நியூயார்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேலும் அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்து உள்ளனர்.

ஒரு நரம்பியல் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி, அவர்கள் ஐந்து பேரில் ஒருவருக்கு பயோ மெட்ரிக் அங்கீகாரத்தை பயன்படுத்தி ஒரு போலி கைரேகை உருவாக்க முடியும் என்பதையும் நிரூபித்து உள்ளனர்.

எப்படி, ஒரு மாஸ்டர் விசையைக் கொண்டு ஒரு கட்டிடத்தின் எல்லா கதவுகளையும் திறக்க முடியுமோ, அதுபோல செயற்கை நுண்ணறிவு திறனை (“Deep Master Prints”)  பயன்படுத்தி, சேமிக்கப்பட்ட கைரேகை தரவுத் தளங்களை எடுக்க முடியும் என்றும் கூறி உள்ளனர்.

ஏற்கனவே “மாஸ்டர் பிரிண்ட்” என்ற வார்த்தையை உருவாக்கிய மெமோன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் ஆராய்ச்சியின்போது,  கைரேகை அடிப்படையிலான இயக்கங்கள் நடைமுறைப்படுத்தும்போது, முழுமையான கைரேகையை காட்டிலும் பகுதி கைரேகைகளை பயன்படுத்துவது நல்லது என்பது குறித்து தனது ஆராய்ச்சியில் விவரித்திருந்தார்.

இதுபோன்ற பயோமெட்ரிக் சாதனங்கள் பொதுவாக பல்வேறு விரல் படங்களை சேர்ப்பதற்கு அனுமதிக்கின்றன, மேலும் சேமித்த பகுதிகளில் இருந்து மீண்டும் ரேகை பதிவு செய்யும்போது, பொருத்தமான அடையாளத்தை  உறுதிப்படுத்துகிறது. ஆனால், இதன் காரணமாக போலி உருவாக்க முடியும்…. இதை தவிர்க்க பகுதி கைரேகைகள் பதிவு செய்வது சற்று பாதுகாப்பானது.

“கைரேகை அடிப்படையிலான  அங்கீகாரம் ஒரு சாதனம் மற்றும் கணினியைப் பாதுகாப்பதற்கான ஒரு வலுவான வழி மட்டுமே. ஆனால் இந்த காலக் கட்டத்தில், பெரும்பாலான அமைப்புகள் பயோமெட்ரிக் முறையையே நம்பகத்தன்மை வாய்ந்தது என்று நம்பிக்கையோடு உள்ளனர். ஆனால், ஒரே ரேகையை போல பிரதி வருகிறதா என்பதை அதில் பார்க்க முடியாது என்று இதுகுறித்து ஆராய்ச்சி செய்து வரும் மாணவர் பிலிப் பான்றஜெர் என்பவர் கூறி உள்ளார்.

மேலும், கைரேகை  தொடர்பான  “இந்த சோதனைகள் பல நிறுவனங்களின் அங்கீகாரத்திற்கான தேவையை நிரூபிக்கின்றன. ஆனால், இவைகள் அனைத்தும் செயற்கை கைரேகை தாக்குதல்களுக்கு சாத்தியமானவை என்பது குறித்து, மின்னணு சாதன உற்பத்தியாளர்களுக்கான விழிப்பூட்டல் ஏற்படுத்த வேண்டும் என்றும்,” அவர் கூறினார்.