புனே விமான நிலைய ஓடுதளத்தில் குறுக்கே வந்த ஜீப்: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி

புனே: புனே விமான நிலைய ஓடுதளத்தில் ஜீப் குறுக்கிட விமானி சாமர்த்திய செயல்பட பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

புனே விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் ஏர் எந்தியா விமானம் 180 பயணிகளுடன் புறப்பட்டது. அதற்கான வானில் பறப்பதற்கு ஆயத்தமானது.

ஓடுதளத்தில் 222 கி.மீ. வேகத்தில் ஓடத் துவங்கியது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் ஓடுதளத்தின் குறுக்கே மனிதரும், ஜீப் ஒன்றும் வேகமாக வருவதை விமானி எதேச்சையாக கவனித்தார்.

இதனால் பதறி போன விமானி உடனடியாக விமானம் ஜீப்பின் மீது மோதி விடாமல் இருக்க அவசர, அவரசமாக செயல்பட்டார். உடனடியாக விமானத்தை டேக் ஆப் செய்து பறக்க செய்தார்.

விமானியின் இந்த சாமர்த்தியத்தால் ஜீப்பின் மீது விமானம் மோதி ஏற்படவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகள் அனைவரும் மயிரிழையில் உயிர் தப்பினர். ஆனால், விமானத்தின் முன்பகுதி சேதமடைந்தது.

இருப்பினும் விமானம் தொடர்ந்து பறந்து, டெல்லியில் பத்திரமாக தரையிறங்கியது.  இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.  மேலும் விசாரணைக்காக அந்த ஏர் இந்தியா விமானம் சேவையில் இருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.