அதிமுகவின் 47 வது ஆண்டுவிழா தொடக்கம்: எம்ஜிஆர்., ஜெ. சிலைகளுக்கு முதல்வர் மரியாதை

சென்னை:

திமுக கட்சி தொடங்கி 46 ஆண்டுகள் முடிந்து  47வது ஆண்டில் காலெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி,  அதிமுக தலைமை அலுவலகத்தில் பல்வெறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் பங்கேற்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும்  அமைச்சர்கள், கட்சியின் முன்னணியினர்பங்கேற்று அங்குள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  அதைத்தொடர்ந்து கட்சி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது,  கட்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது மரணமடைந்த 7 நிர்வாகிகளின் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும், கட்சியினருக்கான பல   நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை ஓ.பி.எஸ்., மற்றும் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.