சென்னை:

மிழகத்தின் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று அதிமுக தலைமை கழகத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்துக்கு, டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி, சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பப்பட்ட  அதிமுகவை சேர்ந்த 3 எம்எல்ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.

மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பின் அதிமுக எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆலோசனைக் கூட்டத்தில் பொதுக்குழு கூட்டுவது தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்ப்பு கூட்டத்தில் பங்கேற்க 3 எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு இல்லை

இந்த நிலையில், தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படாதது குறித்து அவர்கள் கூறிய கருத்துக்கள் வருமாறு,

ரத்தினசபாபதி எம்எல்ஏ

அழைப்பு வராததால் பங்கேற்கவில்லை என்றும், நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காததால் வருத்தமும் இல்லை, சந்தோஷமும் இல்லை என்று கூறினார்.

கலைச்செல்வன் எம்எல்ஏ

அழைப்பு வராததால் பங்கேற்கவில்லை என்றவர்,  ஒற்றைத்தலைமை இல்லாததே அதிமுக தோல்விக்கு காரணம் என்றார். ஒற்றைத்தலைமை இருந்தால் மட்டுமே அதிமுக பலம் பொருந்தியதாக இருக்கும்; தொண்டர்களும் வாக்காளர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தலைமை இப்போது அதிமுகவுக்கு தேவைப்படுகிறது என்று கூறினார்.

பிரபு எம்எல்ஏ

அதிமுக ஆலோசனை கூட்டத்திற்கு எனக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறியவர்,  நல்ல தலைமை இல்லை என தொண்டர்கள் நினைக்கின்றனர்; ஒரு ஆளுமைமிக்க தலைவர்தான் அதிமுகவுக்கு தேவை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.