அதிமுக தேமுதிக கூட்டணி: விஜயகாந்துடன் துணைமுதலமைச்சர் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு

சென்னை:

தேமுதிக தலைவர் விஜயகாந்தை, சென்னை சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் திடீரென சந்தித்து பேசினார். இதில், அதிமுக தேமுதிக கூட்டணி குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இறுதி செய்ய தேமுதிக உயர்நிலைக்கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது,  தேமுதிக கூட்டணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி தங்களது நிலையை அறிவிக்க இருப்பதாக விஜயகாந்த் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டிற்கு சென்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயகுமாரும் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதனால் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது உறுதியாகி இருக்கிறது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ்,  அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கான தொகுதி பங்கீடு குறித்து ஓரிரு நாளில் தெரியவரும் என்றும், மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும்  குறிப்பிட்டார். வரும் 6 ஆம் தேதிக்குள் கூட்டணி குறித்து நல்ல முடிவுகள் இறுதியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

: OPS met with Vijayakanth

கார்ட்டூன் கேலரி