சென்னை:

திமுக தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக் கான கூட்டணி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.  கடந்த சில நாட்களாக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடைபெற்று வந்த நிலையில், எந்தெந்த கட்சிக்கு  எந்தெந்த தொகுதிகள் என்ற பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என கூறப்பட்டு உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து,  அ.தி.மு.க. தலைமையியில்,பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர். காங்கிரஸ் கட்சிகள்  இடம்பெற்றுள்ளன.

இந்த கூட்டணியில் அ.தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அத்துடன்,  பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள், பா.ஜ.க. வுக்கு 5 தொகுதிகள் , தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகள், த.மா.கா.வுக்கு 1 தொகுதி, புதிய தமிழகம் கட்சிக்கு 1 தொகுதி, புதிய நீதிக்கட்சிக்கு 1தொகுதி, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 1 தொகுதி என 40 தொகுதிகளும் பிரித்து ஒதுக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி தொகுதி என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டு விட்டது. அதுபோல, வேலூர் தொகுதி புதிய நீதிக்கட்சிக்கும், தஞ்சாவூர் தொகுதி த.மா.காவுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது.  மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்தும், அதிமுக போட்டியிட உள்ள தொகுதிகள் குறித்தும் இன்று அறிவிக்கப்பட உள்ளது.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அ.தி.மு.க. கூட்டணி தொகுதிகள் பட்டியலை இன்று வெளியிட உள்ளனர்.