அதிமுகவின் 11 வழிகாட்டுக்குழு உறுப்பினர்கள் நியமனம்! எடப்பாடி அறிவிப்பு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் துணை ஒருங்கிணைப் பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பி.எஸ்சின் நீண்ட கால கோரிக்கையான கட்சியின் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து குழுவின் உறுப்பினர்கள் பெயரும் அறிவிக்கப்பட்டது.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் கடும் இழுபறி நீடித்து வந்த நிலையில்,இன்று அதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான், 2021 சட்டமன்ற தேர்தலிலும் முதல்வர் வேட்பாளர் என அறிவித்தார்.

முன்னதாக கட்சியின் கட்சியின் வழிகாட்டுதல்கள் குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதன்படி, குழுவின் உறுப்பினர்களாக எடப்பாடி ஆதரவாளர்கள் 6 பேரும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 5 பேரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

வழிகாட்டுக்குழு உறுப்பினர்கள் விவரம்

1) அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

2) அமைச்சர் தங்கமணி

3) அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி

4) அமைச்சர்  ஜெயக்குமார்

5) அமைச்சர்  சி.வி.சண்முகம்

6) அமைச்சர்  காமராஜ்

7) ஜேசிடி பிரபாகரன்,

8) மனோஜ் பாண்டியன்

9) பா. மோகன்

10) கோபாலகிருஷ்ணன்

11) மாணிக்கம் எம்எல்ஏ (சோழவந்தான்)