இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அதிமுக பணப்பட்டுவாடா? தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்

சென்னை:

மிழகத்தில் நாளை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக பணப்பட்டு வாடா செய்து வருவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆலந்தூர் பாரதி தமிழக தேர்தல் ஆணையரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வுபெற்ற நிலையில், நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

இந்த நிலையில், பொதுமக்களிடம் இருந்து அதிமுகவுக்கு வாக்குகளை பெறும் வகையில்,  அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்து வருவதாகவும், அதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்றும் திமுக புகார் தெரிவித்துள்ளது. திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை சந்தித்து புகார் அளித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி