சென்னை: அதிமுக-பாஜக கூட்டணி குறித்து அடுத்த 3 நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று, தமிழக முதல்வரை சந்தித்த பின் மாநில  பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இணைந்து தேர்தல்களை சந்தித்து வருகிறது. ஆனால், தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், முதல்வர் வேட்பாளர் குறித்து, பாஜக சர்ச்சைக்குரிய வகையில் பேசி, பிரச்சினை செய்து வருகிறது.  இந்த விவகாரத்தில் இரு கட்சிகளின் தலைவர்களும் மாறுபட்ட கருத்துக்களை கூறி வருகின்றனர். ஜெயலலிதா இல்லாத சமயத்தில் தமிழ்நாட்டிற்குள் நுழைந்துவிட நினைக்கிறது என்று பாஜகவை கடுமையாக விமர்சித்தனர். இதனால் கூட்டணி தொடருமே என்பதே கேள்விக்குறியாகி வருகிறது.

இந்த நிலையில்,  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை,  இன்று மாநில பாஜக செயலாளர்  முருகன்  கட்சி நிர்வாகிகளுடன் சென்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முருகன்,  “வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்குக் கிடைக்கும் நன்மைகளை எதிர்க்கட்சிகள் தடுக்கின்றன என்று கூறியவர், புதிய கல்விக் கொள்கையின் தேவை குறித்து 50 லட்சம் கையெழுத்துப் பிரதிகள் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  அதற்காகவே சந்தித்தோம் என்று கூறினார்,

கூட்டணி தொடர்பான கேள்விக்கு,  அதிமுக-பாஜக கூட்டணி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” எனக் கூறினார்.

அதிமுக பாஜக இடையே மோதல் நீடித்து வந்த நிலையில்,  எடப்பாடியை சமாதானப்படுத்தவே முருகன் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.