விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், சாத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில்  அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பிரசாரம் மேற்கொண்டபோது, மாநில அமைச்சரும், வேட்பாளருமான செந்தில் பாலாஜி, முதல்வரின் பிரசார வாகனத்தில் தொற்றிக்கொண்டு சென்றார்.  இதை பார்த்த பொதுமக்களும், கட்சியினரும், அமைச்சருக்கே இதுதான் நிலைமையா என்று எள்ளி நகைத்தனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அரசியில் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. அதிமுக வேட்பாளர்கள் மற்றும் தோழமை கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், சாத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டர்.

ராஜபாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிடுகிறார். இவர் கடந்த  2011 மற்றும் 2016-ம் ஆண்டு தேர்தல்களில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்த நிலையில், தற்போது,  ராஜபாளையத்தில் போட் டியிடுகிறார். அவருக்கு முதல்வர் ஆதரவு கோரி வாக்கு  சேகரித்தார்.

அப்போது, அமைச்சரும், வேட்பாளருமான ராஜேந்திரபாலாஜி முதல்வரின் பிரசார வாகனத்தின் கதவு பகுதியில் இருந்த கம்பியை பிடித்து தொற்றிக்கொண்டு, ஃபுட் போர்டு அடித்துச்சென்றார்.

இது மக்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. ஏற்கனவே அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வரும் அமைச்சர், இப்போது புட்ஃபோர்டு அடித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.