சென்னை:
ரவக்குறிச்சி தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர் செந்தில் பாலாஜி மீண்டும் போட்டியிட தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் நவம்பர் மாதம் 19-ம் தேதி நடைபெறும் என்று நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து தேர்தல் பணிகள் தீவிரவமாக நடைபெற்று வருகின்றன.
தேர்தலில் போட்டியிடுபவர்களின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், அதிமுக சார்பில் போட்டிளியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அவரக்குறிச்சி தொகுதியில் ஏற்கனவே போட்டியிட அறிவிக்கப்பட்ட செந்தில் பாலாஜியே மீண்டும் போட்டியாளராக அறிவிக்கப்பட்டார்.
இதை எதிர்த்து, அரவக்குறிச்சி தொகுதியில் வேட்பாளர் செந்தில்பாலாஜி போட்டியிட தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்தமுறை பொதுத்தேர்தல் நடைபெற்ற போது, இதே தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிடவிருந்த போது, வாக்காளர்களுக்கு பணம் அளித்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. அரவக்குறிச்சியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
balaji
இதன் காரணமாக  அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் நவம்பர் மாதம் 19-ம் தேதி நடைபெறும் என்றும், நவம்பர் 22-ம் தேதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதிக்கும் நவம்பர் 19-ல் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 4 தொகுதிகளுக்குமான வேட்பு மனுத்தாக்கல் அக்டோபர் 26-ம் தேதி துவங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய நவம்பர் 2-ம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நவம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுவை திரும்ப பெற நவம்பர் 5-ம் தேதி கடைசி நாளாகும்.