கர்நாடகா தேர்தல்…அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை:

கர்நாடக சட்டமன்ற தேர்தல் மே 12ம் தேதி நடக்கிறது. இதில் 3 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

காந்தி நகர் தொகுதியில் யுவராஜ், ஹனூர் தொகுதியில் விஷ்ணுகுமார், கோலார் தங்க வயல் தொகுதியில் அன்பு ஆகியோர் போட்டியிடுவார்கள் என முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.